எடப்பாடி கார்ட்டூன்..அட்டாக்கை ஆரம்பித்த அதிமுக! திமுக ஐடி விங் 2.0.. உ.பி.களுக்கு TRB ராஜா அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடி ஆய்வறிக்கை தொடர்பாக அதிமுக குரல் கொடுக்கவில்லை என திமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதாக திமுக ஐடி மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுகவினர் தங்கள் உழைப்பை கவனச்சிதறல்களுக்கு இரையாக்க வேண்டாம் என அமைச்சரும் திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா கூறியுள்ளார்

கீழடி தொடர்பான அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது. மேலும் அறிவியல் பூர்வ ஆதாரங்கள் தேவை எனவும் கூறி வருகிறது. இந்த நிலையில் கீழடி அகழாய்வினை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதை அடுத்து தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே கீழடி விவகாரத்தில் அமைதி காப்பதாக அதிமுக மீது திமுக குற்றம் சாட்டியது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் கார்ட்டூன் ஒன்றையும் வெளியிட்டது.

DMK AIADMK Keezhadi

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாக சித்தரித்ததாக அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களில் திமுக ஐடி விங் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவினர் தங்கள் உழைப்பை கவனச்சிதறல்களுக்கு இரையாக்க வேண்டாம் என அமைச்சரும் திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா கூறியுள்ளார். தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையும், மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்க்கட்சியான அதிமுக இப்போது வரை கண்டிக்காதது ஏன்? கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?

பாஜகவிடம் கூட்டணியில் இருப்பதன் ஒரே காரணத்திற்காக தமிழரின் தொன்மையான நாகரிகத்தைக் காக்க குரல் கொடுக்காமல் 'உறங்குவது ஏன்' என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய திமுக ஐடி விங்
பதிவிற்கு, தகாத அர்த்தங்களைக் கற்பித்து நமது எதிர் கட்சியினர் தங்களைத் தாங்களே ஏன் தாழ்த்திக்கொள்கிறார்கள்? நியாயமாக வந்திருக்க வேண்டிய கோபம் என்ன? தொன்மை தமிழர் நாகரீகத்தின் ஆதாரமான கீழடியை புறங்கையில் தள்ளும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு அல்லவா கோபம் வந்திருக்க வேண்டும்?

இப்போது வரை அப்படியொரு கோபம் ஒன்றிய அரசின் மீதும், பாஜக மீதும் அதிமுகவிற்கு வரவேயில்லையே ஏன்? ஒன்றிய அரசின் வஞ்சகத்தை ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் இப்படி திசை திருப்பும் வேளைகளில் அற்பமாக இறங்குவது தமிழர் விரோத செயல் இல்லையா? எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தனர் : )

ஆனால் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த அண்ணன் அவர்கள்கூட இதுவரை கீழடிக்காக குரல் கொடுக்கவில்லையே? எது தடுக்கிறது? என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை? இன்றுகூட மதுரையின் பெருமைக்காக அவர் பாய்ந்து எழாமல் "கீழடியை வைத்து நமது தொன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னவர் பேட்டி அளித்தது ஏன் !உடன்பிறப்புகளே! எதிர்கட்சியினரின் அவதூறுகளை, என் மீதான அவர்களின் விமர்சனங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.

பாவம், உண்மை தெரிந்தும் யாரோ சொல்லி சாடுகிறார்கள். அந்த அரசியல் எனக்கு தெரியும். நீங்கள் உங்கள் உழைப்பை இந்த கவனச் சிதறல்களுக்கு இரையாக்க வேண்டாம் ! கழக மாணவரணி கீழடிக்காக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அதன் தாக்கத்தை மடைமாற்றவே அதிமுகவினர் கண்டதை வைத்து கம்பி கட்டுகிறார்கள். நாங்கள் கலைஞரின் வார்ப்புகள். எவர் எதிர் வரினும், எந்த இடர் வரினும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் இந்தப் போர் தொடரும்.

தமிழினத்தின் உரிமைக்காக போராடும், இரத்தம் சிந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் நாங்கள். இனத்தை, மொழியை அழிக்க நினைப்பவர்களுக்கும், துணை போகிறவர்களுக்கும் எதிரான முன்கள வீரர்களான திமுக ஐடி விங் பணி தொடரும். கேள்விகளும் தொடரும்" என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+