களையிழந்தது.. அந்த 2 பேர் இல்லையென்றதும்.. வெறிச்சோடிய தமிழக அரசியல்.. "பச்" இப்படி நடந்ததே இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 2 வாரம் கூட இல்லாத நிலையில்.. பிரச்சார களம் இன்னும் சூடு பிடிக்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

முன்பு எல்லாம் சட்டசபை தேர்தல் என்றாலே தமிழகத்தில் பிரச்சார களம் சூடாக இருக்கும். ஒரு பக்கம் ஜெயலலிதாவின் அதிரடி பிரச்சாரம், இன்னொரு பக்கம் கருணாநிதியின் தீவிர பிரச்சாரம் என்று தேர்தல் களம் பட்டையை கிளப்பும். தமிழும்.. நகைச்சுவையும்.. சர்காசமும் இவர்களின் பிரச்சாரத்தில் விளையாடும்.

அதிலும் 2011, 2016 தேர்தல்களில் இவர்கள் இருவரின் பிரச்சாரம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மேடையிலேயே இவர்கள் மாறி மாறி செய்த பதிலடி பிரச்சாரங்கள் எல்லாம் தேசிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறது.

தமிழ்

தமிழ்

முக்கியமாக.. ரத்தத்தை சூடாக்கும் சுத்தமான தமிழில் கருணாநிதி பேசுவதும்.. கணீர் குரலில் ஜெயலலிதா மக்களோடு மக்களாக பேசுவதும் தமிழகம் முழுக்க தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கும். என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்று கருணாநிதி தனது பேச்சை தொடங்குவதும்.. ரத்தத்தின் ரத்தங்களே என்று ஜெயலலிதா அன்பாக அழைப்பதும் இப்போது தேர்தல் களத்தில் பெரிய மிஸ்ஸிங்!

தேர்தல்

தேர்தல்

இவர்கள் இருவரும் இருந்த வரை தமிழக பிரச்சார களம் சூடாக இருக்கும். களத்தில் மாறி மாறி இவர்கள் பதிலடி கொடுப்பதும், அதை ரசிக்கும் வகையில் செய்வதும் இப்போதெல்லாம் வெகுவாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 10 நாட்களே உள்ளது. ஆனால் இப்போதும் கூட தேர்தல் களம் அவ்வளவு சூடாக இல்லை. தேர்தல் சீக்கிரமாக அறிவிக்கப்பட்டு, உடனே இந்த முறை நடக்க போகிறது.

பிரச்சார கூட்டம்

பிரச்சார கூட்டம்

இதனால் பெரிய அளவில் பிரச்சார கூட்டங்களையும் இந்த முறை இரண்டு கட்சிகளும் நடத்தவில்லை. பெரிய அளவில் கூட்டங்களை நடத்துவதற்கும் போதிய நேரம் இல்லை. ஜெயலலிதாவின் வெள்ளை வேன் பிரச்சாரங்களும், செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா என்று கேட்பதும்.. கருணாநிதியின் மாபெரும் பொதுக்கூட்டங்களும் இந்த தேர்தலில் இல்லாமலே போய்விட்டது.

 பரிதாபம்

பரிதாபம்

கடந்த 3-4 வார பிரச்சாரங்களில் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்ததை தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு சுவாரசியமான பிரச்சாரம் எதுவும் நடக்கவில்லை. ஏன் ஸ்டார் பேச்சாளர்கள் கூட இந்த முறை பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. இடி முழங்குவது போல பேசும் வைகோவும் தீவிரமாக பிரச்சாரம் செய்யவில்லை... மனதில் பட்டதை சொல்லும் விஜயகாந்தும் பிரச்சாரம் செய்யும் சூழ்நிலையில் இல்லை.

ஸ்டாலின்

ஸ்டாலின்

தற்போது பிரச்சார களத்தில் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி போன்றவர்கள் கொஞ்சம் கவனிக்க வைத்தாலும்.. அந்த பழைய தீ போன்ற பேச்சு இந்த முறை மிஸ்ஸாகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இரண்டு பெருந்தலைவர்கள் இல்லாமல் முதல் சட்டசபை தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. இவர்களின் இல்லாமை தேர்தல் களத்தில் பட்டவர்த்தனமாக தெரிகிறது.

தலைவர்கள்

தலைவர்கள்

இரண்டு பேரின் வெற்றிடத்தை எக்காலத்திலும் நிரப்பவே முடியாது என்பதை தேர்தல் பிரச்சார களமே படம் பிடித்து காட்டுகிறது! அரசியல் கட்சி கடந்து .. ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்தனர்.. இனியும் இருக்க போகிறார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+