“அக்னி பரீட்சை”.. திமுக Vs அதிமுக Vs பாமக: 5 இடங்களில் நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள்! ஆஹா!
சென்னை: திமுக - அதிமுக - பாமக இடையே 5 தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த 5 இடங்களில் முதல் இடத்திற்கு மட்டுமல்ல 2ஆம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பதிலுமே கடும் போட்டி நிலவும்.
திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான தனித்தனியாக கூட்டணிகள் போட்டியிடுவதால் தமிழகத்தில் இந்த லோக்சபா தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதியே தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வேட்பாளர் பட்டியலை 2 கட்டங்களாக வெளியிட்டு முடித்துள்ளது.

பாஜக கூட்டணியில் தான் கடைசியாக தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக தமிழ்நாட்டில் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களத்தில் அனல் கிளம்பியுள்ளது.
நேருக்கு நேர் மோதல்: பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், தருமபுரி, சேலம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, ஆரணி ஆகிய 5 தொகுதிகளில், திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
பாமகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர தீவிரமாக முயன்றது அதிமுக. ஆனால், பாமக கேட்கும் எண்ணிக்கையில் சீட் தர முடியாத நிலையில், 10 சீட்களை வாங்கிக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக. முதல் நாள் இரவு வரை அதிமுகவுடன் பேசி வந்த நிலையில், காலையில் பாஜக உடன் தொகுதி பங்கீடு செய்து அதிமுகவை அலறவிட்டது பாமக.
இந்நிலையில், 5 தொகுதிகளில் .திமுக Vs அதிமுக Vs பாமக என நேருக்கு நேர் மோதுகின்றனர். வட தமிழ்நாடு மற்றும் கொங்கு பகுதியைச் சேர்ந்த இந்த 5 தொகுதிகளுமே பாமகவுக்கு சாதகமானவை என்பது குறிப்பிடத் தகுந்தது.
தருமபுரி
ஆ.மணி (திமுக)
அசோகன் (அதிமுக)
சவுமியா அன்புமணி (பாமக)
சேலம்
செல்வகணபதி - திமுக
விக்னேஷ் - அதிமுக
அண்ணாதுரை - பாமக
கள்ளக்குறிச்சி
மலையரசன் - திமுக
குமரகுரு - அதிமுக
தேவதாஸ் - பாமக
அரக்கோணம்
ஜெகத்ரட்சகன் - திமுக
ஏ.எல்.விஜயன் - அதிமுக
பாலு - பாமக
ஆரணி
தரணிவேந்தன் - திமுக
கஜேந்திரன் - அதிமுக
கணேஷ்குமார் - பாமக
அதிமுகவா பாமகவா?: தங்கள் கூட்டணியில் இணையாமல் பாமக வெளியேறிய நிலையில், 5 தொகுதிகளிலுமே பாமகவை முந்தும் சவாலுடன் களமிறங்குகிறது அதிமுக. அதேசமயம், அதிக சீட் தராத அதிமுகவுக்கு தங்கள் பலத்தைக் காட்டும் முனைப்புடன் களமிறங்குகிறது பாமக. இரு பெரிய கட்சிகளும் வாக்குகளைப் பிரிக்கும் நிலையில், திமுக வெற்றி வாய்ப்புக்காக தீவிரமாக போராட வேண்டியிருக்கும்.
இந்த 5 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் பெறும் வாக்குகள், திமுக வேட்பாளர்கள் பெறும் வாக்குகளை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில், கூட்டணி அமையாமல் போனதால் அதிமுகவும் பாமகவும் பறிகொடுத்த தொகுதிகள் என இவற்றைக் கருதலாம். முடிவுகள் எப்படி வரப்போகின்றன? பொறுத்திருந்து பார்ப்போம்.
-
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக












Click it and Unblock the Notifications