நெல் ஈரப்பதம்.. விவசாயிகளின் அழுகுரல் பிரதமருக்கு கேட்கவில்லையா.. மத்திய அரசின் துரோகம்.. ஸ்டாலின்!
சென்னை: நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளிடையே பிரதமர் மோடி உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் இழைக்கப்பட்டதாக பதிவிட்டுள்ள ஸ்டாலின், விவசாயிகளின் அழுகுரல் பிரதமரின் காதுகளுக்கு ஏன் கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிட வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று கோவை வந்த பிரதமர் மோடி, தென்னிந்திய வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். விவசாயிகளுடன் பல்வேறு ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, பின்னர் விவசாயம் மற்றும் அடுத்தக்கட்ட இலக்குகள் குறித்து பேசி இருந்தார். குறிப்பாக இயற்கை விவசாயம் தொடர்பாக மோடி பல்வேறு கருத்துக்களை அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், உழவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் மோடி வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை.
அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய மத்திய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications