18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவும், பாஜகவும் நேரடியாக 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 5 தொகுதிகளில் பாஜக, சிட்டிங் அமைச்சர்களை எதிர்த்து வேட்பாளர்களை களமிறக்குகிறது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. திமுக மொத்தம் 164 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது.

இந்நிலையில் தான் திமுக களமிறங்கும் தொகுதிகள் மற்றும் அதில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்று முழுவதுமாக வெளியிடப்பட்டது.
18 இடங்களில் திமுக - பாஜக நேரடி போட்டி
அதன்படி பார்த்தால் திமுகவும், பாஜகவும் நேரடியாக 18 சட்டசபை தொகுதிகளில் மோதுகிறது. அதிமுக சார்பில் பாஜகவுக்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 18 இடங்களில் திமுகவின் வேட்பாளர்களை எதிர்த்து பாஜக வேட்பாளர்களை களமிறக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்.
எந்தெந்த தொகுதிகள்?
இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் திமுக - பாஜக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:
ஆவடி
மயிலாப்பூர்
திருவண்ணாமலை
ராசிபுரம் (தனி)
கோவை வடக்கு
அவிநாசி (தனி)
திருப்பூர் தெற்கு
சாத்தூர் – திருச்செந்தூர்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மானாமதுரை (தனி)
சாத்தூர்
ராமநாதபுரம்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்,
ராதாபுரம்
நாகர்கோவில் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் திமுக - பாஜக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
5 அமைச்சர்களை எதிர்த்து போட்டி
இதில் 5 தொகுதிகளில் பாஜகவினர் சிட்டிங் அமைச்சர்களை எதிர்கொள்ள உள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எவ வேலு, திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன், ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை எதிர்த்து பாஜக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.
யார் யாருக்கு எந்த தொகுதி?
தற்போதைய சூழலில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் சாத்தூர் தொகுதியில பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட வாய்ப்புள்ளது. கோவை வடக்கில் வானதி சீனிவாசன், வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாசாமி, நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி அல்லது பொன் ராதாகிருஷ்ணன் அல்லது மீனா தேவ், மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் திருவண்ணாமலையில் அஸ்வத்தாமன், மதுரை தெற்கில் ராமசீனிவாசன், அவிநாசி (தனி) அல்லது ராசிபுரம் (தனி) தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்புள்ளது. மார்ச் 30ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளதால் இன்று அல்லது நாளை வேட்பாளர்கள் பட்டியல் முழுவதுமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா?












Click it and Unblock the Notifications