58 தொகுதிகள்.. அடிகோடிட்டு காட்டும் மாணிக்கம் தாகூர்.. திமுக மீது காங்கிரஸ் அடுத்த அட்டாக்!
சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வென்ற 58 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 20 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாக இருப்பதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் அடிகோடிட்டு காட்டி இருக்கிறார். இதன் மூலமாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், திமுகவால் ஆட்சி அமைக்க முடியாது என்றும் மறைமுகமாக வார்னிங் கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையில் மோதல் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தரப்பில் 38 சீட் மற்றும் 3 அமைச்சரவை என்ற டிமாண்ட் முதல்வர் ஸ்டாலினிடம் வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொடர்ச்சியாக பேசத் தொடங்கியுள்ளனர்.

அப்படியில்லை என்றால் தவெகவுடன் கூட்டணி அமைப்போம் என்று மறைமுகமாகவும் குரல் கொடுக்கின்றனர். ஜனநாயகன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி எம்பிக்களும், தமிழக காங்கிரஸும் விஜய்க்கு ஆதரவாக பேச தொடங்கி இருக்கிறது. ஜனநாயகன் ரிலீஸ் விவகாரம் தொடர்பாக விஜய்யே அமைதி காக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சி தாமாக முன் வந்து ஆதரவளிப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
இதனிடையே காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யுடன் சந்திப்பு நடத்தியதோடு, திமுகவையும் அட்டாக் செய்ய தொடங்கி இருக்கிறார். இதனால் திமுக - காங்கிரஸ் கட்சியினர் சோசியல் மீடியாவில் சண்டை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை கோடிட்டு காட்டியுள்ளார்.
அதாவது 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட 58 வேட்பாளர்களின் வெற்றியில் உள்ள வாக்கு வித்தியாசம் 20 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதன் மூலமாக மாணிக்கம் தாகூர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால், திமுகவின் வெற்றி பாதிக்கப்படும் என்று மறைமுகமாக சாடி இருக்கிறார்.
அதேபோல் திமுக கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸ் ஒருபோதும் கூறவில்லை என்றும், ஆட்சியில் பங்கு மட்டுமே கேட்கிறோம் என்ற காங்கிரஸ் ஆதரவாளரின் பதவிவை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சேர்த்து, "அரசவை கவிஞர்களும் இந்த ஐடி விங் மகான்களுக்கும் நல்ல பாடம்" என்று கூறியுள்ளார். இது திமுகவினர் மத்தியில் இன்னும் கொதிப்படைய வைத்திருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications