திமுகவுக்கு கை கொடுக்கும் பாஜக எதிர்ப்பு.. தவறவிடும் விஜய்.. தவெக தடம் மாறுவது இங்கே தான்!
சென்னை: தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதல் திமுக எதிர்ப்பை மையமாக கொண்டு செயல்பட்டு வருவது அக்கட்சியினர் மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது. திமுக எதிர்ப்பை காட்டிலும், பாஜக எதிர்ப்பு விஜய்க்கு மக்கள் மத்தியில் கூடுதல் வாக்குகளையும் பெற்றுக் கொடுக்கும் விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். இதன்பின் அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அப்போது தங்களின் அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜகவையும் விஜய் அறிவித்தார். அதன்பின் பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வந்தார்.

குறிப்பாக திமுகவின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அறிக்கைகள் மூலமாக விஜய் விமர்சித்தார். அந்த வகையில் திமுக தரப்பில் நடத்தப்பட்ட அறிவுத் திருவிழாவையும் விஜய் விமர்சித்திருப்பது அவரது தொண்டர்கள் மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த விமர்சன அறிக்கையில் கூட விஜய், தவெகவை பக்கா மாஸ் கட்சி என்றும் விஜய்யே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே மதுரை மாநாட்டில் தன்னைத் தானே சிங்கம் என்றும் விஜய் பேசி இருந்தார். தனது கட்சி குறித்தும், தன்னை குறித்தும் விஜய் தனக்கு தானே பில்டப் கொடுப்பது தவெக தொண்டர்கள் மத்தியிலும் விமர்சனத்தை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே திமுக அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டனர்.
பாஜக எதிர்ப்பு அரசியலை திமுக தொடர்ச்சியாக முன்னெடுத்து தேர்தல் வெற்றிகளையும் அறுவடை செய்து வருகிறது. 2019 முதல் தற்போது வரை நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவை தீவிரமாக எதிர்ப்பது திமுக தான் என்பதை தங்களின் செயல்பாடுகளில் நிரூபித்து வருகிறது. SIRக்கு எதிரான நிலைப்பாட்டில் கூட திமுகவின் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய்யுள்ளது.
ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததோடு, அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைத்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கும் திமுகவினார் பிஎல்ஓ-க்களுடன் செல்கின்றனர். இன்னொரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆனால் தவெகவோ ஒரேயொரு தீர்மானத்தை மட்டும் போட்டுவிட்டு களத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் செயல்பட்டு வருகிறது.
தவெக அரசியலுக்கு வந்த நாள் முதல் திமுக எதிர்ப்பு என்ற ஒரேயொரு குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். திமுகவின் செயல்பாடுகளை விமர்சிப்பதோடு, மக்களுக்கு தேவையான அரசியலையும் முன்னெடுக்க வேண்டும் என்பதே தவெகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக தவெக ஆட்சிக்கு வந்தால், விஜய்யின் செயல் திட்டங்கள் என்ன என்பது குறித்தும் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு











Click it and Unblock the Notifications