வாக் அவுட் கொடுத்த உதயநிதி! நடுநிலை வகித்த பாஜக, பாமக எம்.எல்.ஏ.க்கள்! சட்டசபையில் சுவாரசியம்
சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் வாக்கெடுப்பை திமுக புறக்கணித்து வெளியேறிய நிலையில், பாமக, பாஜக, எம்எல்ஏக்கள் நடுநிலை வகிப்பதாக கூறினர்.
தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் முன்மொழிந்தார். தவெகவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து உறுப்பினர்கள் உரையாற்றினர்.

தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நம்பிக்கை குரல் வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் ஆதரவை தெரிவித்தன.
தொடர்ந்து சௌமியா அன்புமணி வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்தார். விஜய் கோரிய தீர்மானத்தை எதிர்ப்பதாக பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவித்தனர். தொடர்ந்து சட்டசபையில் எண்ணிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் அறிவித்தார்.
இந்த நிலையில் திமுக வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன நிலையில் திமுக உறுப்பினர்கள் வெளியேறினர். அதே நேரத்தில் தீர்மானத்தை எதிர்ப்பதாக சொல்லி அதிமுக எடப்பாடி அணியினர் சட்டசபையில் இருந்தனர். அதே நேரத்தில் தீர்மானத்தில் நடுநிலை வகிப்பதாக பாமகவின் நான்கு உறுப்பினர்களும், பாஜகவின் ஒரு உறுப்பினரும் அவையில் அமர்ந்திருந்தனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications