விஜய் வருகையால் வாக்கு சதவீதம் கூடியிருக்கா? வெறும் 0.6% தான் அதிகம்! ஓபனாக பேசிய ஆர்எஸ் பாரதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் என்ன மாதிரியான அலை வீசியதோ அதே அலைதான் தற்போதும் வீசுகின்றது. 200+ தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். வாக்கு சதவீதம் எல்லாம் உயரவில்லை. கடந்த தேர்தலை விட 0.6 சதவீதம் மட்டுமே வாக்கு சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.. வாக்கு சதவீதம் என்று பார்க்காமல் வாக்குகள் எத்தனை பதிவாகியுள்ளது என பாருங்கள் என்று திமுக அமைச்சர் ஆர் எஸ் பாரதி கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு சதவீதம் இதுவரை இல்லாத அளவாக பதிவாகியுள்ளது. 6 மணி நேர நிலவரப்படி 84.5 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், திமுக அமைச்சர் ஆர் எஸ் பாரதி கடந்த தேர்தலை விட 0.6 சதவீதம் மட்டுமே வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-

RS Bharathi

வாக்கு சதவீதம் உயரவில்லை

1967, 1971, 1989, 1996, 2006, 2021 இந்த 6 சட்டசபை தேர்தலில் என்ன மாதிரியான மனநிலை இருந்ததோ, அதே மனநிலை தான் இன்றும் உள்ளது. அதுமட்டும் இல்லை 2024 நாடாளுமன்ற தேர்தலில், எவ்வளவு ஓட்டுகள் பதிவாகியதோ அதே எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் தான் பதிவாகி இருக்கிறது. அந்த தேர்தலில் நாங்கள் 40/40 வெற்றி பெற்றோம். இப்போது 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அழகாக தெரிகின்றது. கணக்கு சரியாக வருகிறது.

வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளது என்று சொல்வது தவறு.. போன முறை எவ்வளவு வாக்குகள் பதிவாகியது என்று பாருங்கள்.. காரணம், சதவீதம் என்று பார்த்தீங்க என்றால் 65 லட்சம் ஓட்டுகளை நீக்கிவிட்டனர். அப்படி பார்க்கும் போது வாக்கு சதவீதம் கூடினது போன்று தெரியும். போன முறை எவ்வளவு வாக்குகள் பதிவாகியது. 4 கோடியே 71 லட்சம் வாக்குகள் பதிவாகியது. அதே நம்பர் தான் இப்போதும் பதிவாகி இருக்கிறது.

0.06 சதவீதம் தான் அதிகம்

0.6 சதவீதம் மட்டுமே இப்போது வந்த கணக்கின்படி அதிகரித்து இருக்கிறது. 0.6 என்பது ரொம்ப ரொம்ப குறைவானது. அதில் தான் புது ஓட்டுகளும் அடங்குகிறது. போன முறை டபுள் டபுள் ஓட்டுக்கள் போடப்பட்டு இருக்கும். அது எல்லாம் இப்போது நீக்கப்பட்டு ஒரே ஓட்டாக மாறியிருக்கும். அதையெல்லாம் சேர்த்து பார்க்கின்ற போது இதில் டேலி ஆகிடும். ஆக மொத்தம் எந்த வாக்கு சதவீதமும் கூடவில்லை..

2024 தேர்தலில் தமிழக மக்களின் மனநிலை எப்படி இருந்ததோ அதே போன்று தான் இப்போதும் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கப்போவது உறுதி.. திமுக மீண்டும் வெற்றி பெறப்போவதும் உறுதி.. எஸ்.ஐ.ஆர் காரணமாகவே இது பெரிதாக தெரிகிறது.

விஜய் வருகையால் வாக்கு சதவீதம் அதிகமானதா?

1967இல் இருந்து தேர்தலை பார்த்து இருக்கிறேன்.. இன்று அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எங்கும் சிறு சலசலப்புக் கூட ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் எங்காவது ஒரு பிரச்சனை இருந்ததா? இது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதற்கு சான்று.." என்று கூறினார்.

அப்போது விஜய்யின் தவெக வருகை காரணமாகத்தான் வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஆர் எஸ் பாரதி, "பெட்டியை திறந்தால் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். எங்களுக்கு கம்பர்டபிள்.. நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்.. யார் யார் எவ்வளவு வாக்கு வாங்குகிறார்கள் என்பது பெட்டியை திறந்ததும் தெரிந்துவிடும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+