சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவர்தான் "சபாநாயகர்".. இந்த 2 பேரும் கண்டிப்பா அமைச்சர்.. அனல் பறக்கும் "அண்ணாசாலை" ஆலோசனை!

திமுக தரப்பில் அமைச்சர்கள் லிஸ்ட் தயாராகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்கு பின்பும் சரி, திமுகவுக்கு சாதகமான சூழலே நிலவுவதாக தகவல்கள் வந்து வண்ணம் உள்ளன.. அந்த வகையில், அடுத்து திமுதான் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்புகள் உறுதியாகி வருவதால், திமுக தலைமை லிஸ்ட்டுகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.. இதனால் 10 வருடங்களுக்கு பிறகு தொண்டர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், திமுக தலைமை அடுத்தடுத்த வேலைகளில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் 3 விதமான லிஸ்ட்கள் ரெடியாகிறதாம்..

நேர்மை

நேர்மை

ஒன்று அதிகாரிகள் பற்றின லிஸ்ட்.. இதில் உயர் அதிகாரிகள் யார்? யார்? திமுக ஆட்சியின் போது விசுவாசமாக செயல்பட்டவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியில் நேர்மையாக செயல்பட்டவர்கள் என்ற ரீதியில் இவை ரெடியாவதாக சொல்கிறார்கள்.. சில அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாகவே திமுக தலைமைக்கு போன் போட்டு தங்கள் வாழ்த்துக்களை சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்களாம். அடுத்ததாக, அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ரெடியாகும் அளவுக்கு விவாதம் நடந்து வருகிறதாம்..

உத்தரவு

உத்தரவு

இதில் கண்டிப்பாக செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கட்டாயம் வழங்கப்படும் என்கிறார்கள்.. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டபோதே, முக்கிய அமைச்சர்களை தோற்கடித்தால் அமைச்சரை பதவி என்று திமுக தலைமையில் ஒரு வாய்மொழி உத்தரவு சொல்லப்பட்டிருந்ததாம்.. அந்த வகையில், எம்ஆர் விஜயபாஸ்கர், ஓபிஎஸ் போன்றோரை தோற்கடிக்கவே செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வனை களம் இறக்கப்பட்டது. இந்த தொகுதியில் இவர்கள் வெற்றி பெற்றால், அமைச்சர் பதவியும் நிச்சயம் என்ற சலசலப்பு எழுகிறது.

 சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன்

மூன்றாவதாக, திமுக ஆட்சி அமைத்தால், யார் சபாநாயகர் என்ற ரீதியிலும் விவாதங்கள் நடந்து வருகிறதாம்.. அந்த வகையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. சுப்புலட்சுமியை பொறுத்தவரை, திமுகவில் சீனியர்.. திமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராகவும், கைத்தறித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்...

 பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர்

இந்த முறை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.. இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் சரஸ்வதி போட்டியிடுகிறார்... சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.. தற்போது, சபாநாயகராக இவரை நியமிக்க பரிசீலனை நடந்து வருகிறது.. ஒருவேளை இவரை மட்டும் நியமனம் செய்தால், தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையையும் பெறுவார்.. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்..!

English summary
DMK: Who is the next TN assembly Speaker and Ministers if DMK rules
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X