திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி மீண்டும் வெல்லும் என்று 'லோக் போல்' (Lok Pol) அமைப்பின் மெகா சர்வே முடிவுகளில் கூறப்பட்டு உள்ளது. இதில் ஆளும் திமுகவிற்கு மீண்டும் தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழக அரசியல் களம் தற்போது 'லோக் போல்' (Lok Pol) அமைப்பின் மெகா சர்வே முடிவுகளால் அதிரத்தொடங்கியிருக்கிறது. 1.17 லட்சம் மாதிரிகளுடன், தொகுதிக்கு 500 பேர் என எடுக்கப்பட்ட இந்த முடிவுகள், கோட்டை நோக்கிய ஓட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பலமாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

உதயசூரியனின் தனி ஆவர்த்தனம்?
திமுக கூட்டணிக்கு 181 முதல் 189 இடங்கள் வரை கிடைக்கும் என்கிற கணிப்பு, அறிவாலயத் தரப்பில் 'மெகா ஹேப்பி' ரகம். 40.1% வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், கடந்த தேர்தலை விடவும் இந்த முறையும் தனிப்பெரும்பான்மை (Single Majority) என்பது திமுகவிற்கு எட்டாக்கனி அல்ல, எட்டும் தூரம் தான் என்பதை இந்த சர்வே கோடிட்டுக் காட்டுகிறது.
கூட்டணி பலம் ஒருபுறம் இருந்தாலும், 181 இடங்களுக்கு மேல் ஒரு கூட்டணி பிடிப்பது என்பது தமிழக அரசியலில் ஒரு 'கிளின் ஸ்வீப்' (Clean Sweep) நிலையை நோக்கிய நகர்வு. ஆகும். அதாவது திமுக இதில் தனி மெஜாரிட்டியும் பெற வாய்ப்புகள் உள்ளன. 181 என்று வந்தால் - திமுக தனியாக 140 வரை கூட எடுக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்று யாரும் கேட்க மாட்டார்கள். முக்கியமாக காங்கிரஸ் தலைவர்கள் கேட்க மாட்டார்கள்.
இரண்டாம் இடத்திற்கு மல்லுக்கட்டும் கட்சிகள்
அதிமுக+ (29%): 38 முதல் 42 இடங்கள் என்பது பிரதான எதிர்க்கட்சிக்கு ஒரு சவாலான சூழலே. அதாவது அதிமுக இந்த முறை எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்வதே சிக்கலாக மாற வாய்ப்புகள் உள்ளன. வாக்கு வங்கியில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், இடங்களின் எண்ணிக்கையில் பலத்த போட்டியைச் சந்திக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் (23.9%): அரசியலில் 'என்ட்ரி' கொடுத்த வேகத்திலேயே 8 முதல் 10 இடங்கள் மற்றும் சுமார் 24% வாக்கு வங்கி என்பது தமிழக அரசியலில் ஒரு 'புதிய துருவத்தின்' உதயத்தைக் காட்டுகிறது. இது மற்ற பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் கை வைத்துள்ளதா என்கிற விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆனால் இவ்வளவு சதவிகிதம் எடுத்தும் 10 இடங்களுக்கு கீழ் எடுப்பது விஜய்க்கு சிக்கலாகலாம்.
அரசியல் சதுரங்கத்தின் அடுத்த கட்டம்
நாம் தமிழர் கட்சி 4.9% வாக்குகளைப் பெற்றாலும், இடங்களைப் பிடிக்க முடியாமல் போவது 'வழக்கமான' சவாலாகத் தொடர்கிறது.
181+ என்பது வெறும் அசத்தலான நம்பர் மட்டுமல்ல, அது ஆளுங்கட்சியின் மீதான 'ஆன்டி-இன்கம்பன்சி' (Anti-incumbency) அலை வீசவில்லை என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், இந்த 'சர்வே ரிப்போர்ட்' மற்ற கட்சிகளை வியூகம் மாற்றத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
மீண்டும் ஒருமுறை திமுக கூட்டணி 180-ஐக் கடந்து சாதனை படைக்குமா அல்லது கள எதார்த்தம் மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications