கடைசி வரை விடாத ஸ்டாலின்.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்றே அறிவிப்பு.. ஆனால்!?
சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார். திமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலும் இன்றே வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக கட்சி தனது கூட்டணியை இறுதி செய்து உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த இடங்களை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 176 இடங்களில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் திமுக கடைசி வரை கறாராகவே இருந்தது. பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்பும் கூட்டணி கட்சிகளுக்கு 60 இடங்களுக்கு மேல் கொடுக்கும் விருப்பம் திமுகவிற்கு இல்லை.

திமுக
இவ்வளவு இடம்தான் கொடுப்போம்.. ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணுங்க என்று திமுக உறுதியாக இருந்தது. திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டு இருக்கும் இடங்கள் பின்வருமாறு.
திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு 60 இடங்கள் ஒதுக்கீடு
திமுக போட்டியிடும் எண்ணிக்கை - 174 தொகுதி
திமுகவின் உதய சூரிய சின்னம் போட்டியிடும் எண்ணிக்கை - 13 கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டி. மொத்தமாக 187 இடங்களில் உதயசூரியன் சின்னம் போட்டி.
காங்கிரஸ் - 25 இடங்கள்
விசிக - 6 இடங்கள்
மதிமுக - 6 இடங்கள்
இந்திய கம்யூனிஸ்ட் - 6 இடங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 6 இடங்கள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3 இடங்கள்
கொங்கு மக்கள் தேசிய கட்சி- 3 இடங்கள்
மனிதநேய மக்கள் கட்சி - 2 இடங்கள்
தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி - தலா ஒரு இடம்

அறிவிப்பு
திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்த இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் நேற்று தொகுதிகளை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடந்தது. புதிதாக கூட்டணி கட்சிகளை சேர்க்க விருப்பம் இல்லாத நிலையில் திமுக தொகுதிகளை தேர்வு செய்ய ஆலோசனை செய்தது. ஆலோசனையின் முடிவில் சுமுகமான உடன்படிக்கை எட்டப்பட்டது.

உடன்படிக்கை
தொகுதிகளை தேர்வு செய்வதிலும் கூட திமுக கறாருடன் செயல்பட்டு இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு முக்கியமான தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில் திமுகவிற்கு விருப்பம் இல்லை. கடைசி வரை திமுக கூட்டணி கட்சிகளிடம் கண்டிப்புடன் செயல்பட்டுள்ளது. நேற்று இரவில்தான் முழுமையான தொகுதி தேர்வு முடிவிற்கு வந்துள்ளது.

முடிந்தது
இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார். திமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலும் இன்றே வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று திமுகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று முன்பே ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால்?!
ஆனால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சில ஆலோசனைகளை மேலும் செய்ய வேண்டி உள்ளது. இதனால் இன்று முழுமையான பட்டியல் வெளியாவது சந்தேகம்தான். அதிமுகவும் இன்றுதான் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளது. இதனால் இன்று தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருக்க போகிறது!
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications