மத்திய அரசின் 'கருப்புச் சட்டங்களுக்கு' எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு- ஸ்டாலின்
சென்னை: விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு கையெழுத்து இயக்க போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உலகப் பேரிடரான கொரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் - மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு. குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் 4 சட்டங்களை நடைமுறைப்படுத்திட பா.ஜ.க. அரசு தீவிரமாகச் செயல்படுகிறது.

மின்சார சட்டத் திருத்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020; இந்த 4 சட்டங்களும் பெயரளவில் நன்மை செய்வது போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் அம்சங்கள், வேளாண்மைக்கு வேட்டு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தன்மை கொண்டவை என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, பொதுமக்களையும் பாதிக்கும் இந்தக் கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டக் களத்தைக் கட்டி அமைத்துள்ளது.
அவசரச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறும் வகையில் தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்துவதுடன், ஜூலை 27 அன்று அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்திடவும் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இந்தக் கையெழுத்து இயக்கம் மற்றும் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம், தனது முழு ஆதரவினை வழங்குகிறது.
கறுப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படுவதற்கு தி.மு.க. துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications