விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கிளீன் ஸ்வீப்! அப்போ நாம் தமிழர் சதவிகிதம்? அக்னி நியூஸ் சர்வே
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கட்சி கிளீன் ஸ்வீப் செய்யும் என்று அக்னி நியூஸ் சேனல் கணிப்பு வெளியிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவிகிதம் குறித்தும் இதில் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் கிளீன் ஸ்வீப் செய்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 4வது பெரிய தனி கட்சியாக மாறி உள்ளது. இந்த தேர்தலில் ஸ்வீப் செய்த ஒரே மாநில கட்சி திமுகதான். இந்த நிலையில் திமுகவிற்கு அடுத்த டெஸ்ட்டாக விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி: விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன . அடுத்த 2 வாரங்கள் தேர்தல் தேதிகள் நடைமுறையில் இருக்கும்.வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை எல்லாம் முடிந்துவிட்டன.
வாக்குப்பதிவு : ஜூலை 10 நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13 நடக்கிறது
வேட்புமனு தாக்கல்: விக்கிரவாண்டிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்தவர் புகழேந்தி. வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இத்தொகுதியில் பெரும்பான்மை சதவீதம் பேர் வன்னியர்கள்தான். அதனால், இந்த முறையும் திமுகவில் வன்னியர் ஒருவருக்கே சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது..
திமுக பிளான்: கட்சித் தலைமையும் இது குறித்து சீரியஸ் காட்டி வருகிறது. புகழேந்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கலாமா? அல்லது மாவட்ட திமுகவில் அணி சார்ந்த முக்கிய பொறுப்பில் உள்ள வன்னியர்களில் ஒருவரை தேர்வு செய்யலாமா? என தீவிர ஆலோசனை திமுகவில் நடந்துள்ளது.
அப்போது அமைச்சர் பொன்முடி, என மகனுக்கு வாய்ப்புத் தாருங்கள். அல்லது நான் சுட்டிக்காட்டும் நபருக்கு வாய்ப்புத் தாருங்கள். வன்னியரல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்துக் காட்டுகிறேன் என அழுத்தமாக வாதிட்டிருக்கிறாராம். ஆனால், பொன்முடி பேச்சுக்கு மதிப்பளித்து ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என யோசித்த ஸ்டாலின், அப்போது, வன்னியர் ஒருவரை உங்கள் சாய்ஸாக சொல்லுங்களேன் என கேட்க அதற்கு எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார் பொன்முடி.
இதற்கிடையே, வன்னியரல்லாத ஒருவரை நியமித்தால் விழுப்புரம் மாவட்ட திமுக வன்னியர்கள் தேர்தலில் உள்ளடி வேலைகளை செய்வார்கள் என்கிற தகவல்களும் அமைச்சர் உதயநிதி வழியாக திமுக தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டாலின் ரிஸ்க்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட எடுக்காத ஒரு ரிஸ்க்கை முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளார். விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தீவிரமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு கடைசியில்தான் சிவாவை வேட்பாளராக தேர்வு செய்துள்ளாராம். முதல்முறையாக பொன்முடி கட்டுப்பாட்டில் உள்ள ஏரியா ஒன்றில் பொன்முடி சொல்லாத ஒருவரை ஸ்டாலின் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக சந்தேகம்; அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து உள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
மும்முனை போட்டி: இதனால் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிமுக யோசித்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதனால் திமுக - பாமக - நாம் தமிழர் இடையே இங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கட்சி கிளீன் ஸ்வீப் செய்யும் என்று அக்னி நியூஸ் சேனல் கணிப்பு வெளியிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவிகிதம் குறித்தும் இதில் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
திமுக கூட்டணி 56%
பாமக கூட்டணி 33%
நாம் தமிழர் 9%
மற்றவை 2%
தற்போது திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணி 56% வாக்குகளை வெல்லும் என்று இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக அக்னி நியூஸ் சேனல் கணிப்பில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெல்லும் என்று சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications