மற்றதை விடுங்க.. ஸ்டாலினுக்காக திமுகவுக்கு ஓட்டு! அடித்து சொல்லும் 37.96% மக்கள்- புதியதலைமுறை சர்வே
சென்னை:வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற எது உதவும் என்ற கேள்விக்கு ஸ்டாலினின் தலைமை என்று 37.96 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சி மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்து அதை இன்று வெளியிட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் தேர்தல் கருத்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு மற்ற அம்சங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி மக்களிடம் விடை காணப்பட்டது.

மதசார்பின்மை
வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற எது உதவும் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. மதச்சார்பின்மை என்பதற்கு 8.35 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது திமுக மதசார்பின்மையை கடைபிடிக்கும் என நம்பி வாக்களிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

எடப்பாடிக்கு எதிரான மனநிலை
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பதற்கு 6.72 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். அதாவது எடப்பாடியாருக்கு எதிராக, அதிருப்தி அலை இல்லை என்று தெரிகிறது. அதிமுக பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக 9.16 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

மத்திய அரசு கட்டுப்பாடு
அதிமுக அரசின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு எதிர்ப்பதற்காக 6.48 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். வேறு கருத்து என்பதற்கு 11.93 சதவீதம் ஓட்டுப் போட்டுள்ளனர். சொல்ல இயலாது என்று 19.41 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

அதிருப்தி இல்லை
இந்த கருத்துக் கணிப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தி அலை இல்லை என்பது தெரிகிறது. அதே நேரம், அந்த அதிருப்தி அலையை விடவும், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது தான் தவறு என்பது போல மக்கள் மனநிலை உள்ளதை இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஸ்டாலின் தலைமை
மேலும், வெறுமனே அதிருப்தி அலை மூலமாக திமுக ஆதரவு பெறவில்லை. ஸ்டாலின் என்ற தலைவரின் பிம்பம் மக்கள் மத்தியில் உயர்ந்து இருப்பது திமுக மீதான நாட்டத்திற்கான காரணம் என்பதை இந்தக் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே லோக்சபா தேர்தலில் ஸ்டாலின் தனது ஆளுமையை தலைமை பண்பை நிரூபித்துக் காட்டிவிட்டார். திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த கருத்துக் கணிப்பு ஸ்டாலின் தலைமையை நம்பி மக்கள் திமுகவுக்கு வாய்ப்பு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட்












Click it and Unblock the Notifications