சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடக்கில் "கை" வைத்த ஸ்டாலின்.. 38 தொகுதிகளை அள்ளும் திமுக.. அதிமுகவுக்கு 10 தான்.. ஏபிபி சி வோட்டர்

Google Oneindia Tamil News

சென்னை: வட தமிழகத்தில் திமுக வெற்றி கொடியை நிலை நாட்ட போகிறது.. கடந்த தேர்தலில் இங்கு 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது என்றும், அதே போல 25 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்றும் ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலில் அதிக எதிர்பார்ப்புக்கு உரிய =மண்டலங்களில் வட தமிழகம் ஒன்றாகும்.. பொதுவாக, திமுகவுக்கு இங்கு செல்வாக்கு மிகவும் குறைவு என்று சொல்வார்கள். அதனால்தான் ஒவ்வொரு முறையும் பாமகவுடன் கூட்டணி வைத்து அதிமுக அல்லது திமுக தேர்தலை சந்திக்கும்.

இந்த முறை வட தமிழகத்தை விட்டு விடக்கூடாது என்றுதான், எடப்பாடியார் போராடினார்.. இடஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து, பல்வேறு தரப்பினரின் அதிருப்தியையும் சம்பாதித்து பாமகவுடன் கூட்டணி வைத்தார். இதனால், வடதமிழகத்தில் மக்கள் தொகையில் மிகப் பெரும் சமுதாயமாக வாழும் வன்னியர்கள் வாக்கு வங்கியை பெற்று விடலாம் என்று அதிமுக கணித்திருந்தது.

தட்டித் தூக்கும் திமுக.. தமிழகத்தில் 170 இடங்கள் வெல்லும்.. அதிமுகவுக்கு 68.. ரிபப்ளிக் எக்சிட் போல்தட்டித் தூக்கும் திமுக.. தமிழகத்தில் 170 இடங்கள் வெல்லும்.. அதிமுகவுக்கு 68.. ரிபப்ளிக் எக்சிட் போல்

பாமக

பாமக

ஆனால், திமுக இந்த முறை வெற்றி வாய்ப்பை பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளே அறுதியிட்டு சொல்லின.. இப்போது எக்ஸிட் போல்கள் வெளியாகி உள்ளன.. அதில் ஏபிபி சி வோட்டர் சர்வேயில் அதிமுகவுக்கு இங்கு பெரும் சரிவு காத்திருப்பது உறுதியாகியுள்ளது.

வெற்றி

வெற்றி

அதன்படி, வட தமிழகத்தில் திமுக வெற்றி கொடியை நிலை நாட்ட போகிறது.. கடந்த தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது என்றும், அதே போல 25 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சதவீதம்

சதவீதம்

அதாவது, கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால், அதிமுக 13 இடங்களை இந்த முறை இழக்கிறது... அதே நேரத்தில் திமுக 12 இடங்களை கூடுதலாக பெறுகிறது... வாக்கு சதவிதம் அடிப்படையிலும், 2016ல் 40.2 சதவீதம் வாக்குகளை பெற்ற அதிமுக, இந்த முறை 31.5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது... இதன்மூலம் பாமக அரசியல் ஸ்திரத்தன்மையை வெகுவாக இழந்திருப்பது தெரிய வருகிறது.

 அமமுக

அமமுக

அதே நேரத்தில் 39.2 சதவீதம் வாக்குகளை மட்டும் கடந்த முறை பெற்றிருந்த திமுக, 51.6 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. அமமுகவை பொறுத்தவரை, 2.7 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.. வட தமிழகத்தில், வன்னியர் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க ராமதாஸ் எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. ராமதாஸ் முன்னெடுத்த அரசியலால், வடதமிழகத்தில், வன்னியர் அல்லாத சமூகங்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஒன்றிணைந்து திமுகவுக்கு வாக்களிக்க திரும்பி விட்டதும் தெரிய வந்துள்ளது.

 திமுக

திமுக

அமமுக இப்படி என்றால், பிற கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் மேலும் குறைகிறது. 14.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே பிற கட்சிகள் பிரித்துள்ளதாக தெரிகிறது. ஆக மொத்தம் எதிர்பார்த்தபடியே வடதமிழகத்தில் திமுகவின் கை ஓங்க தொடங்கி உள்ளது.

English summary
DMK will win in 22 Constitutions in Northern Districts, ABB C Voter Exit Poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X