செம பிளான்.. தென்காசியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் வெற்றி பெற்ற திமுக.. உற்சாகத்தில் தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்காசியில் கடும் போட்டி நிலவிய நிலையில் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் அதிக வாக்குகளை பெற்று மாஸ் வெற்றியை குவித்துள்ளார். இதனால் தென்காசி திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி எம்பி தொகுதி ஆகும்.

காங்கிரஸின் கோட்டை என சொல்லப்படும் தென்காசி தொகுதியில் திமுக கடந்த 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தோல்வி கண்டது திமுக. அதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டதே கிடையாது.

நேரடி போட்டி

நேரடி போட்டி

இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் 28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக களம் காண்பது என முடிவு செய்தார். அதன்படி அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட தனுஷ் குமார் என்ற திமுக வேட்பாளரை அறிவித்தார்.

புதிய தமிழகம் சார்பில்

புதிய தமிழகம் சார்பில்

அது போல் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் தோற்கடித்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தென்காசி தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும் என தொண்டர்கள் உற்சாகத்துடன் காத்திருந்தனர். 28 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட்டு முதல் முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது நிச்சயம் ஒரு சாதனையாகும். கடந்த 1991-இல் கூட போட்டியிட்டு தோல்வியை தழுவிய இக்கட்சி தற்போது வெற்றி பெற்றிருக்கிறது.

39 ஆண்டுகளுக்கு பிறகு

39 ஆண்டுகளுக்கு பிறகு

தென்காசி மட்டுமல்லாது சேலம் மற்றும் பொள்ளாச்சியிலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற கடின வெற்றியை பெற ஸ்டாலின் வியூகம் வகுத்ததுதான் காரணம் என்கின்றனர் அறிவாலய வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+