வேண்டாம் CAA, NRC.. சென்னை முகப்பேரில் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்பு
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முகப்பேரில் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வல அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென சென்னை பெசன்ட் நகரில் சில வீடுகளின் முன் வேண்டாம் என்ஆர்சி, வேண்டாம் சிஏஏ என பெண்கள் கோலமிட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டனம்
இதையடுத்து போலீஸார் 6 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவித்தனர். 6 பெண்கள் கைதை எதிர்த்து ஸ்டாலின், வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கருணாநிதி வீட்டில்
இந்த நிலையில் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும் என்ஆர்சிக்கு எதிராக கோலமிடப்பட்டிருந்தது. அது போல் கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்தில் நேற்றைய இரவே கோலமிடப்பட்டிருந்தது.

திமுக நிர்வாகிகள்
இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கோலமிடப்பட்டுள்ளது. இன்னும் சில திமுக நிர்வாகிகளின் வீட்டிலும் கோலமிடப்பட்டுள்ளது.

கோஷம்
அது போல் சென்னை முகப்பேரில் திமுக மகளிரணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டத்தை கண்டித்து அங்கிருந்த பெண்கள் கோஷங்களையும் எழுப்பினர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications