Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் வரை பறந்த பெயர்.. யார் இந்த லெட்சுமிவேலு.. வடசென்னையில் ஒரே நெகிழ்ச்சியாமே.. சூப்பர்..!

கொருக்குப்பேட்டை லட்சுமி வேலுவின் செயல்பாடுகள் பாராட்டை பெற்று வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது லெட்சுமி வேலுவின் பெயர்.. யார் இவர்? அப்படி என்ன செய்தார் லட்சுமி?

Recommended Video

    தொடர் மக்கள் சேவை.. Stalin வரை பறந்த பெயர்.. யார் இந்த லெட்சுமிவேலு ?

    லெட்சுமி வேலு.. இவரது கணவர் பெயர் வேலு.. சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்தவர்.. இவர் ரஜினியின் தீவிர அபிமானி.. ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளராகவும் இருந்தவர்..

    ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிகம் ஆசைப்பட்டவர்.. காரணம், ரஜினி வந்தால் மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பியவர்களில் இவரும் ஒருவர்.

    இயக்கம்

    இயக்கம்

    கடைசியில் ரஜினி, அரசியலுக்கு வராமலேயே ரிட்டையர் ஆகிவிடவும், அன்றைய தினமே அந்த இயக்கத்தில் இருந்து விலகினார்.. தடாலடியாக திமுகவிலும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்தார்.. இதுகுறித்து நமக்கு ஒரு பரபரப்பான ஸ்பெஷல் பேட்டியையும் தந்தார் லட்சுமி.

    பேட்டி

    பேட்டி

    அதில், "திமுகவில் இணைவதை ரஜினி மக்கள் மன்ற நண்பர்கள் தடுத்தார்கள். ஆனாலும் நான் இணைந்துவிட்டேன். 38 மகளிரணி செயலாளர்களில் கடைசியாக வடசென்னைதான்... வடசென்னை லட்சுமி வாங்கம்மா என்றுதான் ரஜினை என்னை அழைப்பார்.. ஆனால், அரசியலில் அவருடைய பின்வாங்கல் காரணமாகவும், மக்களுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் திமுகவில் இணைந்தேன்" என்று கூறியிருந்தார்.

    சேவை

    சேவை

    வழக்கமாக, மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தோம் என்று எல்லாருமே சொல்வார்கள்.. ஆனால், லட்சுமி அப்படி இல்லை.. சேவையை உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.. இப்போது திமுகவின் திமுக மகளிர் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.. எப்போதுமே தன்னை நம்பி வருபவர்களை கைவிடாத திமுக, லட்சுமியையும் கைவிடவில்லை.

     பிளாஸ்டிக் குடோன்

    பிளாஸ்டிக் குடோன்

    அதற்கேற்றபடி லட்சுமி, தன்னுடைய தொகுதிக்குள் அதிரடியாக களப்பணி ஆற்றி வருகிறார்.. இப்போது லட்சுமி ஏன் இவ்வளவு பரபரப்பாக பேசப்படுகிறார் என்றால், இவர் கணவர் வேலு, பழைய இரும்புக்கடை வைத்திருக்கிறார்.. கொருக்குப்பேட்டையியே இந்த கடை உள்ளது.. இதிலேயே பிளாஸ்டிக் சாமான்களும் உள்ளன..

    நஷ்டம்

    நஷ்டம்

    கடந்த வாரம் அதாவது 28-ம்தேதி விடிகாலை 5 மணிக்கு இந்த கடை தீப்பிடித்துவிட்டது.. மொத்த குடோனும் கருகிவிட்டது.. தீயணைப்பு துறையினரே 4 மணி நேரம் போராடித்தான் அந்த தீயை அணைத்தார்கள்.. இந்த தீயில் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து பஸ்மமாகிவிட்டது. இதனால் நிலைகுலைந்துபோனார் லட்சுமி.. ஆனால், அன்றைய தினமே, தன்னுடைய தொகுதியில் ஒரு நலத்திட்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

    நலத்திட்டம்

    நலத்திட்டம்

    தன்னால் யாருக்கும் எந்தவித கஷ்டமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பெரும் சோகத்துடன், கனத்த மனதுடன் அந்த நலத்திட்ட உதவிகளை செய்து தந்துவிட்டு போனார் லட்சுமி.. இதுமட்டுமல்ல, கருணாநிதி பிறந்தநாளன்று, 198 ஏழை எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் முதல் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

    உதவிகள்

    உதவிகள்

    இப்போது கூட தொகுதியில் நலத்திட்ட உதவிகளை கணக்கில்லாமல் செய்து வருகிறார்.. தன் தொகுதிக்குட்பட்ட மகளிர் குழுக்களை சார்ந்தோருக்கான உதவிகளையும் லட்சுமியேயே ஏற்று வருகிறார்... ஒருவர் வந்து உதவி என்று கேட்பதைவிட, தானாகவே வலிய சென்று உதவி வருவதும், தன் சொந்த பிரச்சனை ஆயிரம் இருந்தாலும், மக்களின் நலத்திட்டங்கள் சரியாக நடக்க வேண்டும் என்று லட்சுமி காட்டி வரும் இந்த முனைப்பும், பெரிதும் மக்களை ஈர்த்து வருகிறது..

    பாராட்டு

    பாராட்டு

    இறுதியில், அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர் மூலம், ஸ்டாலின் வரை விஷயம் சென்றுள்ளது.. அனைத்தையும் கேட்ட முதல்வர் ஸ்டாலின், விரைவில் லட்சுமியை சந்தித்து வாழ்த்து கூற இருப்பதாகவும் தெரிகிறது.. பிரதிபலன் எதிர்பாராமல் நாம் நற்காரியங்களை செய்து கொண்டே இருந்தால், நம்மையும் அறியாமல் அங்கீகாரமும், அடையாளமும் கிடைத்துவிடும் என்பதற்கு லட்சுமி ஒரு உதாரணம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+