திமுகவுக்கு தோல்விகரமான வெற்றி இது.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. சொல்கிறார் தமிழிசை!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அடைந்திருப்பது தோல்விகரமான வெற்றி என்று பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் திமுக களங்கப்பட்டு நின்றதால், களத்தில் யாரும் நிற்கவில்லை என்று கூறியுள்ள அவர், இந்த வெற்றியால் திமுகவுக்கு எந்த பெருமையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிப்.5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 38,428 வாக்குகளும், நாதகவின் சீதாலட்சுமி 7,791 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர்.

ஏற்கனவே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டன. இருப்பினும் கடந்த இடைத்தேர்தலோடு ஒப்பிடும் போது கணிசமான அளவில் வாக்கு சதவிகிதம் பதிவாகியது. சுமார் 72 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகியதால், திமுக மற்றும் நாதக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் தான் முன்னிலையை தக்க வைத்திருக்கிறார். அவருக்கு சவால் அளிக்கும் வகையில் கூட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குகளை பெறவில்லை. இதனால் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தலைமையேற்றதில் இருந்து அந்தக் கட்சி போட்டியிட்ட பெரும்பாலான தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் இணைந்துள்ளது. திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மூத்த தலைவரான தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், திமுகவுக்கு தோல்விகரமான வெற்றி இது. போட்டி போடுவதற்கு ஓட்டப் பந்தயத்தில் ஆளே இல்லை. இதனால் கோப்பையை நான்தான் வென்றேன் என்பதில் எந்த பெருமையும் கிடையாது. மற்றவர்கள் நம்பிக்கையோடு போட்டி போடுவதற்கான சூழலை ஏற்படுத்தவில்லை. திமுக களங்கப்பட்டு நின்றதால், களத்தில் யாரும் இல்லை. அதனால் இதனை உண்மையான வெற்றி கிடையாது.
நாங்கள் போட்டிபோடவில்லை. அதனால் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும் இந்த வெற்றி, ஒரு வெற்றியே அல்ல என்பதே என் கருத்து என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு ஒருமுறை பாஜக தோல்வியடைந்தது குறித்த தமிழிசை பேசிய போது, வெற்றிகரமான தோல்வி என்று பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications