"9 லட்சம் சதுர அடி.." உலக சாதனை படைத்த சேலம் திமுக இளைஞரணி மாநாடு.. என்ன ரெக்கார்ட் தெரியுமா
சென்னை: திமுக இளைஞரணி மாநாடு இன்று மிகவும் பிரம்மாண்டமாகச் சேலத்தில் நடந்த நிலையில், இந்த மாநாடு இப்போது உலக சாதனையைப் படைத்துள்ளது. 9 லட்சம் சதுர அடியில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டிற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி சார்பில் இன்று சேலத்தில் 2ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இதற்காக அங்கே பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இளைஞரணி மாநாடு முதலில் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அப்போது பெய்த கனமழையால் இந்த மாநாடு இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
திமுக இளைஞரணி மாநாடு: இந்தச் சூழலில் தான் இன்று திமுக இளைஞரணி மாநாடு இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக அங்கே பிரம்மாண்ட மேடை போடப்பட்டுள்ளது. பந்தல்கள், சேர்கள் என்று இந்த ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டுள்ளது. மாநில உரிமை மீட்பு என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாடு இன்று காலை தொடங்கியது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு தலைவர்கள் நேற்றைய தினமே சேலத்திற்குச் சென்றடைந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று இரவு டிரோன் நிகழ்ச்சி ஒத்திகையும் கூட நடந்தது. பல்வேறு தலைவர்களின் உருவங்கள் டிரோன்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தச் சூழலில் தான் இன்று திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுகவினர் குவிந்துள்ளனர்.
உணவு: மிகவும் பிரம்மாண்டமாக நடந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திமுக தொண்டர்களுக்கு மதிய உணவு தர நேற்றைய தினம் முதலே பணிகள் நடந்தன. விடிய விடிய இதற்கான பணிகள் நடைபெற்றது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா ஆகியவை வழங்கப்பட்டன. அதேபோல இன்று காலை 5000 பேருக்கு விஐபி டிபனும் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் பல்வேறு தலைவர்களும் பேசினர். இறுதியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
உலக சாதனை: இதற்கிடையே சேலம் திமுக இளைஞரணி மாநாடு உலக சாதனையாக அங்கீகாரம் பெற்றதுள்ளது. 9 லட்சம் சதுர அடியில் நடைபெற்ற இளைஞரணி மாநாடு உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Unique world records அமைப்பு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழும் முதல்வர் ஸ்டாலினிடம் இந்த இளைஞரணி மாநாட்டில் வழங்கப்பட்டது.
பந்தல் அமைப்பாளர் கலை வேந்தர் பந்தல் சிவா இதற்கான சான்றிதழும் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அதேபோல முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் உதயநிதிக்கும் நினைவுப் பரிசை வழங்கினர்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications