உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? கடன் எவ்வளவு இருக்கு தெரியுமா
உதயநிதியின் சொத்து மதிப்பு ரூ. 28 கோடியே 50 லட்சம் ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வேட்பாளர்கள் வளர்பிறை முகூர்த்த நாளான இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்
சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 50 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. வளர்பிறை முகூர்த்த நாளான இன்று புதன்ஹோரையில் வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி தன்னிடம் உள்ள அசையும், அசையா சொத்து மதிப்புகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மநீம, புதிய தமிழகம் என பல முனைப் போட்டி நிலவுகிறது. எத்தனை போட்டிகள் இருந்தாலும் பல தொகுதிகளில் திமுக, அதிமுக இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை 12 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அன்றைய தினம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். சனி,ஞாயிறுக்கிழமை விடுமுறை முடிந்து திங்கட்கிழமையான இன்று வளர்பிறை முகூர்த்தநாள் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவரும் முதல்வர் வேட்பாளருமான மு.க ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நல்ல நேரத்தில் உதயநிதி வேட்புமனு தாக்கல்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் புதன்ஹோரையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எம்.எல்.ஏ என்பது நியமனப் பதவி கிடையாது. என்னை வாரிசு அரசியல் என்று மக்கள் நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும் என்றார்.

திமுகவின் வெற்றி தொகுதி
திமுகவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பேன். கருணாநிதி, அன்பழகன், மறைந்த எம்.எல்.ஏ அன்பழகன் எம்.எல்.ஏவாக இருந்ததொகுதி. தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏவாக இருந்ததாலே அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வன்முறையற்ற ஆட்சி
பத்து வருடங்களாக ஆட்சியில் இருக்கும்போது செய்யாமல் அறிக்கை விட்டதை மக்கள் ஏற்க மாட்டார்கள். கண்டிப்பாக மக்கள் தி.மு.க அறிக்கையைத் தான் ஏற்பார்கள். மக்களுக்கு வன்முறையற்ற ஆட்சியைத் தருவோம் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.28.82 கோடி சொத்துக்கள்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ. 28.82 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மொத்த அசையும் சொத்து மதிப்பு 22.28 கோடி மதிப்பு . அசையா சொத்து மதிப்பு ரூ. 5.37 கோடி. ரேஞ்ச்ரேவர் கார், திருவள்ளுரில் வேளாண்மை நிலம் உள்ளது

மனைவியின் சொத்து மதிப்பு
உதயநிதிக்கு கடன் ரூ.1.35 கோடி உள்ளது. 2019-20 ல் வருமான வரி 4.89 லட்சம் தாக்கல் செய்துள்ளார். மனைவி கிருத்திகாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சம் ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications