மொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன?

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடந்தது. திமுக கட்சியை அடிமட்ட அளவில் வளர்த்தெடுப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கட்சி மகத்தான வெற்றியை சந்தித்தது. இந்த தேர்தலில் முதல்முறை திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

பல மாவட்டங்களில் அவர் கிராம சபை கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார். அவரின் பிரச்சாரம் திமுகவிற்கு பெரிய அளவில் கைகொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

என்ன உதவி

என்ன உதவி

அதேபோல் அவருக்கு மக்கள் செல்வாக்கும் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மொத்தமாக இளைஞரணியை கட்டுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

சிக்கல்

சிக்கல்

ஆனால் திமுக இளைஞரணியில் பல மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதனால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் சில அதிருப்தி உறுப்பினர்களை சந்தித்து ஏற்கனவே சமாதானம் செய்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் மொத்தமாக இளைஞரணியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார் என்கிறார்கள்.

முக்கியம்

முக்கியம்

இந்த நிலையில்தான் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடந்தது. காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் இந்த கூட்டம் நடந்தது. திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

திமுக இளைஞரணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்யும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. உள்ளாட்சி மன்ற தேர்தலில் இளைஞரணியில் இருந்து பலருக்கு வாய்ப்பு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது. அது தொடார்பாக இன்று ஆலோசிக்கப்பட்டது, திமுக இளைஞரணியில் முக்கிய மாற்றங்கள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வளரும்

வளரும்

இதன் மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்று உதயநிதி கூறியுள்ளார். இதன் மூலம் உதயநிதி கட்சியை வளர்க்க அதிரடியாக களமிறங்கிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். அவர் முதல்முறை இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் இப்படி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+