"செக் மேட்!" விறுவிறு ஒலிம்பியாட் பணிகள்.. ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த உதயநிதி! செஸ் விளையாடி அசத்தல்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாகச் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்
இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். உலகெங்கும் உள்ள 187 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த செஸ் தொடரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் சர்வதேச வீரர், வீராங்கனைகள் கடந்த சில நாட்களாகவே சென்னை வரத் தொடங்கிவிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி
வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் வீரர், வீராங்கனைகள் தங்க மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சாலை மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்றன. செஸ் ஒலிம்பியாட் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

முன்னோட்டம்
ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்றைய தினம் அதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு முன்னோட்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மொத்தம் 1414 வீரர்கள் செஸ் விளையாடினர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறை. இது "நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில்" இடம் பெற உள்ளது.

உதயநிதி
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமாந உதயநிதி திடீரென விசிட் அடித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு முன்னோட்டமாக நடத்தப்பட்ட நிகழ்விலும் உதயநிதி கலந்து கொண்டு கலக்கலாக செஸ் விளையாடினார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

ஆய்வு
செஸ் ஒலிம்பியாட் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். உதயநிதி அங்கு வந்திருப்பதைக் கண்ட மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும், அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். அப்போது அமைச்சர்கள் மெய்யநாதன். த.மோ.அன்பரசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தமிழக அரசு
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைப் பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடங்கும் ஜூலை 28ஆம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் "வெல்கம் டூ நம் ஊரு சென்னை" என்ற பாடலும் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து இலவச பேருந்துகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Recommended Video

சென்னையில் எப்படி
முதலில் இந்தப் போட்டிகள் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தான் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெற இருந்த பல சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே செஸ் ஒலிம்பியாட் தொடரும் ரத்து செய்யப்பட்டது. அப்போது தான் இந்த வாய்ப்பை சென்னை பெற்றது. அதன் பின்னர் வெறும், சில மாதங்களில் இதற்கான அனைத்து பணிகளையும் கச்சிதமாக நடத்தி முடித்துள்ளது தமிழக அரசு
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications