உதயநிதி ஓகே.. திமுக இளைஞர் அணியின் பிற நிர்வாகிகள் யார் யார்..?
Recommended Video
சென்னை: திமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளாக உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் பட்டம் சூட்டப் போவது பழைய செய்தி. இது புது செய்தி. அதாவது பிற நிர்வாகிகள் குறித்த செய்தி.
திமுக இளைஞரணிச் செயலாளராக வெகுவிரைவில் உதயநிதி ஸ்டாலின் வரவுள்ள நிலையில், அந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ உள்ளது.
பல ஆண்டுகளாக இளைஞரணியில் அங்கம் வகித்து வரும் சுப.சந்திரசேகர், தூத்துக்குடி ஜோயல், அசன் முகமது ஜின்னா, உள்ளிட்டோர் இளைஞரணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்கள்.

புதிய இளைஞர்கள்
அவர்களுக்கு பதில் இளைஞர் அணியில் பொறுப்பு வகிக்க இளம் கூட்டம் ஒன்று உள்ளே செல்லத் தயாராகி வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய, நட்பிற்குரிய இடத்தில் இருப்பவர் புதுக்கோட்டை அப்துல்லா. இவர் அசன் முகமது ஜின்னாவின் இடத்தை இளைஞரணியில் நிரப்புவார் எனக் கூறப்படுகிறது.

மகேஷ் - ராஜா
அதற்கு பதில் அரசியலில் ஆக்டிவாகவும், உதயநிதியின் நட்பு வட்டத்திலும் இருக்கும் பொன்முடி மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. க்கு வாய்ப்பு தரப்படுமாம். உதயநிதி, அன்பில் மகேஷ், பொன்.கவுதமசிகாமணி, டி.ஆர்.பி.ராஜா, புதுக்கோட்டை அப்துல்லா, ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இளைஞரணியில் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்கக் கூடும் என அறிவாலய வட்டாரத்தில் கதைக்கப்பட்டது.

மண்டல வாரி பிரதிநிதித்துவம்
மத்திய மண்டலம் அன்பில் மகேஷ், கொங்கு மண்டலம் ஜெயராமகிருஷ்ணன், டெல்டா டி.ஆர்.பி.ராஜா, வடக்கு மண்டலம் பொன்.கவுதமசிகாமணி, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரத்தை கவர் செய்வது போல் புதுகை அப்துல்லா என்று திட்டமிடப்பட்டுள்ளதாம்.

முட்டி மோதல்
வடக்கு மண்டலத்தைப் பொறுத்தவரை பொன்முடிக்கும், எ வ வேலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாம். வேலு தனது மகன் கம்பனை நுழைக்கப் பார்த்தாராம். ஆனால் கெளத சிகாமணி வென்று விட்டாராம்.

தென் மண்டலம் யாருக்கோ
தென் மண்டலத்திலிருந்து யார் வருவார் என்று தெரியவில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் மு.க.அழகிரி திமுகவுக்குத் திரும்பினால் அவரது மகன் தயாநிதி அழகிரிக்காக அந்தப் பொறுப்பை மட்டும் வேகன்ட் ஆக வைக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை!!!
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications