பணிவு.. அஜித்குமார் குடும்பத்திடம்.. மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. உருகி பாராட்டும் திமுகவினர்
சென்னை: திருப்புவனம் காவலாளி தாயிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதை திமுகவினர் பாராட்டி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மன்னிப்பு கேட்ட முதல்வர்
நேற்று அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் பாதிக்கப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித் குமார் தாய் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுதொடர்பாக அஜித் குமார் தாய் பேசுகையில், என் பையனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கொலை செய்துவிட்டார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு 28 ஆண்டுகள் வளர்த்து பறிகொடுத்துவிட்டோம். இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு ஸ்டாலின், ரொம்ப வருத்தமா இருக்கு.. மன்னித்துவிடுங்கள்.. மனதை தேற்றிக் கொள்ளுங்க.. கவலையாக இருக்கு.. தப்பு நடந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

சிபிஐக்கு மாற்றம்
நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளை விசாரணை சரியாக நடக்குமா என்ற ஐயம் எழுப்பிய உடன் கோர்ட்டிலேயே அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது என்று தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வாதம் வைத்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு அதிகாரபூர்வ நிலைப்பாடு எடுத்துள்ளது. சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை கிடையாது என என்ஓசி தாக்கல் செய்ய கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுகவினர் பாராட்டு
திருப்புவனம் காவலாளி தாயிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதை திமுகவினர் பாராட்டி வருகின்றனர். அதில், ஒரு மாநில முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் நேரடியாக மன்னிப்பு கேட்பதும்; குற்றம் செய்த தன் காவல்துறை ஆட்களை கைது செய்வதும் இயல்பானதில்லை. ஸ்டாலின் முன்னெடுப்பு பாராட்டுக்குரியது. கொலைக்கு காரணமான புகார்தாரரின் பின்னணி அவரின் தொடர்பில் இருந்த மேலிட அதிகாரவர்க்கத்தின் முழு பின்னணியை ஆராய வேண்டும்.
நடந்ததை நியாயப்படுத்தவில்லை. டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை. தன் மக்களிடம் மன்னிப்பு கேட்க தயங்கவில்லை. காவல்துறை நடத்திய கொலைக்கு நம் முதல்வர் அந்த தாயிடமும், தம்பியிடமும், அமைச்சர் பெரியகருப்பனுடைய தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொல்கிறார். குற்றமிழைத்தவர்கள் தண்டனை பெறுவார்கள் என்கிறார். எதிர்கட்சிகள் எதையும் பேசட்டும், ஆனால் முதல்வர் தன் மனந்திறந்து பேசுவது எங்கு நடக்கும்?

தமிழ்நாட்டின் முதலமைச்சர்..72 வயது ,50 வருட அரசியல் பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதல்வர் ஸ்டாலின். மகனை இழந்து வாடும் ஒரு சாதாரண பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறார். அதனால்தான் அவர் தலைவர்.அவரை தமிழ்நாடு கொண்டாடுது. முதல்வர் ஸ்டாலின் காவல்துறை வன்முறையால் உயிரிழந்த அஜீத்குமாரின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டது பாராட்டுக்குரியது. அவரது ஆட்சியில் இனி custodial deaths - including fake encounters - நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவரது கடமை.

கடைநிலை ஊழியன் செய்த குற்றத்திற்கு தான் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கும் பண்பு கொண்ட முதல்வர் ஆளும் மாநிலத்தில் எங்களை போன்ற அரசியல் ஆதரவாளர்களிடம் வந்து அதை பற்றி பேச சொல்வது நியாயமா தோழர்களே...! தப்பு யார் மேல இருந்தாலும் அவர் பாத்துப்பார்!

கடைநிலை ஊழியன் செய்த குற்றத்திற்கு தான் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்கும் பண்பு கொண்ட முதல்வர் ஆளும் மாநிலத்தில் எங்களை போன்ற அரசியல் ஆதரவாளர்களிடம் வந்து அதை பற்றி பேச சொல்வது நியாயமா தோழர்களே...! தப்பு யார் மேல இருந்தாலும் அவர் பாத்துப்பார்!



-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications