1997லேயே செய்து காட்டிய திமுக! ஏதோ புதுசா செய்யுற மாதிரி காட்டும் விஜய்.. சட்டமன்றத்தில் சலசலப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். ஆனால், இது 1997லேயே அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம்தான் என்று திமுகவினர் கூறுகின்றனர்.

சட்டமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். உத்தரவுகள், தீர்ப்புகள் உள்ளிட்டவை அனைத்தும் தமிழில் வெளியாக வேண்டும் என்று கூறி.. சட்டமன்றத்தில் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார் விஜய்.

DMK vijay tamil

1997ல் செய்து காட்டிய திமுக

ஆனால், உடன் பிறப்புகள் சொல்வதை போல கடந்த காலங்களில் 1997 தொடங்கி 2006 வரை இதுபோன்று மொத்தம் 3 தீர்மானங்களை திமுக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை. உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வேண்டும் என்கிற கோரிக்கை 1980களிலிருந்தே தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. 1996ல் திமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர், நீதிமன்றங்களில் தாய்மொழியை பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் அதற்கான வழக்கறிஞர்களின் போராட்டங்களும் சூடுபிடித்தன.

கலைஞர் கருணாநிதி

இதன் தொடர்ச்சியாக 1997ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார். இதன்படி உயர்நீதிமன்றத்தில் அன்றாட வழக்கு விசாரணைகள், வாதங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் தமிழ் மொழியை ஒரு சட்டப்பூர்வமான அலுவல் மொழியாக அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்தியது. இது சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் செயல்

இந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் 1999ல் சட்டமன்றத்தில் மீண்டும் இதேபோன்று வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு.. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கம் போல மத்திய அரசு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதை இப்படியே விட்டால் வருஷத்துக்கு ஒரு தீர்மானம் போட்டு அனுப்புவார்கள் என்று பயந்த மத்திய அரசு.. பின்னர் வேறு வழியின்றி தீர்மானத்தை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு அனுப்பி வைத்தது.

நிராகரித்த நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் அடங்கிய முழு அமர்வு, இந்த தீர்மானங்களை விரிவாக விவாதித்தது. இருப்பினும் தொழில்நுட்ப கட்டமைப்புகள், தட்டச்சர்கள் பற்றாக்குறை மற்றும் தீர்ப்புகளின் தரம் பாதிக்கப்படலாம் என்கிற காரணங்களை சொல்லி, 1997 மற்றும் 1999 ஆகிய இரு கோரிக்கைகளையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

கலைஞரின் முயற்சி

இருப்பினும் இந்த விஷயத்தை கலைஞர் லேசில் விடுவதாக இல்லை. நாடு முழுவதும் தொழில்நுட்பங்கள் வளர தொடங்கிய காலம் அது. எனவே மீண்டும் 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். வழக்கறிஞர்கள் தங்களது தாய்மொழியான தமிழில் வாதாட வேண்டும், பொதுமக்கள் தங்கள் வழக்குகளை தங்களுக்கு தெரிந்த மொழியிலேயே புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற நீண்ட கால கோரிக்கை இந்த தீர்மானத்தில் வலுவாக இருந்தது.

வெறும் முயற்சி மட்டுமல்ல

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. வெறும் தீர்மானத்தோடு கலைஞர் நின்றுவிடவில்லை. உயர்நீதிமன்றத்தில் தமிழை செயல்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தட்டச்சர்கள் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்கவும் தேவையான நிதியை கலைஞர் தலைமையிலான தமிழக அரசு உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இருப்பினும் மீண்டும் இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு.. தீர்மானத்தை நிராகரித்தது.

போதுமான சட்ட கலைச்சொற்கள் இல்லாமை மற்றும் தரம் வாய்ந்த உடனடி மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் பற்றாக்குறை உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

விஜய்யின் முயற்சி

இதன் தொடர்ச்சியாகவே இன்று மீண்டும் இந்த தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது. இதில் சிறிய திருத்தம் இருக்கிறது. முன்னர் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் தமிழையும் அலுவல் மொழியாக சேர்த்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டது. ஆனால், விஜய் முன்மொழிந்த தீர்மானத்தில்.. தமிழ்தான் முதன்மையான மொழியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் தற்போது சட்டமன்றத்தில் திமுக-தவெக உறுப்பினர்களிடையே விவாதங்களாக வெடித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+