கிளி ஜோசியம்.. குடுகுடுப்பை ஜக்கம்மா.. பகுத்தறிவு திமுக இப்படி இறங்கிருச்சே!
கிளி ஜோசியம், குடுகுடுப்பை மூலம் வாக்கு சேகரித்து வருகிறது திமுக
Recommended Video
சென்னை: திமுக என்ன இப்படி இறங்கிவிட்டது என்று ஆச்சரியமாக உள்ளது.. ஒரு பக்கம் கிளி ஜோசியம், இன்னொரு பக்கம் குடுகுடுப்பைக்காரர் வேஷத்தில் ஜக்கம்மா.. என்று தேர்தல் களம் பரபரக்கிறது.
கருணாநிதி உயிரோடு இருந்தவரை இந்த அளவுக்கு வெளிப்படையாக எதுவுமே இருந்தது இல்லை. அவ்வளவு எதற்கு? பொட்டு வைத்த வேட்பாளர்கள் போட்டோகூட அப்போது வெளியே வராது.
ஒருவேளை தப்பி தவறி பொட்டு வைத்த வேட்பாளர்களின் போட்டோ இருந்தால், அந்த போட்டோ அழிக்கப்பட்டுதான் வெளியாகும். ஆனால் இப்போது அப்படி கிடையாது. சந்தனம், குங்குமம், விபூதி என மங்கல வேட்பாளர்கள் போட்டோக்களும் வெளியாகி கொண்டுதான் வருகிறது.

பகுத்தறிவு
பகுத்தறிவு பாடம் திமுக குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்குமே இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பகுத்தறிவு என்பது தானாக தனக்குள் ஏற்படுவது, அது யார் சொல்லியும், கட்டாயப்படுத்தியும் ஒருபோதும் வருவது கிடையாது. இது மட்டுமில்லை.. கடவுள் நம்பிக்கையும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு. அதற்குள் நாம் போக வேண்டியது இல்லை.

கிளி ஜோசியம்
ஆனால் கழகம் என்று வரும்போது, கடவுள் மறுப்பு கொள்கையின் அஸ்திவாரத்தில்தான் திமுக உருவானது. அந்த வகையில், ஓட்டு கேட்கும் முறையில் ஆத்திகம் புகுந்து கொண்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. வேலூர் தொகுதியில் கிளி ஜோசியம் றெக்கைகட்டி பறக்கிறது. மற்றொரு புறம் ஜக்கம்மாள் வந்து ஓட்டு கேட்கிறாள்.

ஜக்கம்மாள்
வெறும் ஜாலிக்காகவோ, மக்களின் ஓட்டுக்களை கவர்வதற்காகவோ, இப்படி ஒரு விஷயத்தை திமுக கையில் எடுப்பதானால் அதை யாரும் பெரிதுபடுத்த தேவையில்லை, சீரியஸாகவும் பார்க்க தேவையில்லை. உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுபோடும்படி ஜக்கம்மாள் சொல்றாள் என்பதும், உதயநிதி ஸ்டாலின் போட்டோவை ஒரு கிளி எடுத்து கொடுத்து, ஜோசியம் சொல்வதும்.. பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளது.

இந்துக்கள்
ஆனால் அதே சமயம், "இந்துக்களுக்கு எதிரியல்ல. நாங்களும் பக்திமான்கள்தான்" என்கிற விஷயத்தை திமுக மக்களிடையே பதிவு செய்யும் வகையில் இந்த டிசைன் டிசைன் ஐடியாக்கள் வேலூரில் உலா வருகிறதோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications