திமுகவை கைவிட்ட 3.. தூக்கி விட்ட இந்த 3 தொகுதிகள் மட்டும் இல்லாவிட்டால்!
திமுகவுக்கு சாதகமான முடிவை தந்தது வேலூர், ஆம்பூர் தொகுதிகளே
Recommended Video
சென்னை: வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி தொகுதி மக்களுக்கு திமுக தரப்பு உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். இந்த அளவுக்கு ஒரு வாக்கு வித்தியாசத்தை தந்திருக்கிறார்கள் என்றால் அது இந்த தொகுதி மக்கள்தான்!
வேலூர் மக்களவை தொகுதி என்பது வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
வன்னியர்கள் ஒரு பக்கம், முதலியார்கள் இன்னொரு பக்கம் இருந்தாலும் இஸ்லாமியர்கள்தான் இந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை எப்போதும் நிர்ணயிப்பவர்கள்.

பாஜக
அதாவது கிட்டத்தட்ட 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. இந்த 3 லட்சத்தை யார் அள்ள போகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் என்பது பொதுவான கணிப்பு. அந்த வகையில் இந்த முறை வன்னியர் தரப்பு கதிர் ஆனந்துக்கும், முதலியார் தரப்பு ஏசிஎஸ்-க்கும் வாக்கு அளித்தாலும், இந்த 3 லட்சம் இஸ்லாமிய ஓட்டுக்களை பெரும்பான்மையாக பெற்றது திமுகதான்.

பாஜக
இத்தனைக்கும் அதிமுக, பாஜகவை பல வகையில் ஒதுக்கி வைத்து, தன்னை முஸ்லீம்களுக்கு ஆதரவானவர்களாக காட்டிக் கொள்ள முனைந்தாலும், திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு சாதகமாகிறது. இதற்கு உதாரணம் வாணியம்பாடி, ஆம்பூர். ஒட்டுமொத்த வேலூர் தொகுதியில் வாணியம்பாடியில்தான் இஸ்லாமியர் ஓட்டுக்கள் அதிகம் ஆகும்.

ஆம்பூர்
அதேபோல, நகர்ப்புற வாக்குகளிலும் திமுகதான் முன்னிலை பெற்றுள்ளது. அதற்கு உதாரணம் வேலூர். அதாவது இஸ்லாமிய, நகர்ப்புற என்ற இந்த இரண்டு வகையிலும் திமுக வாக்குகளை அள்ளி உள்ளது. அதனால்தான் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் வேலூர், வாணியம்பாடி, ஆம்பூரில் மட்டுமே அதிக வாக்குகள் திமுகவுக்கு விழுந்துள்ளன.

நன்றி
மற்ற 3 தொகுதிகள் திமுகவை கைவிட்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது. இல்லையென்றால், அதிமுகவால் திமுகவுக்கு இணையாக கடைசிவரை டஃப் கொடுக்க முடிந்திருக்காது. இதில் என்ன ஒருவேடிக்கை என்றால், 6 தொகுதிகளில் திமுக கவனம் செலுத்தியது அனைக்கட்டு தொகுதியில் என்றுதான் சொன்னார்கள். ஆனால் வேலூர், ஆம்பூர்,வாணியம்பாடி முந்திக் கொண்டு வந்து திமுகவை முன்னிலையில் வைத்துவிட்டது. இந்த 3 தொகுதி மக்களுக்கு திமுக எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications