“தமிழ்நாட்டை அவமானப்படுத்திய விஜய்.. விவசாயிகளுக்கு துரோகம்”- திமுக முன்னாள் MLA பரந்தாமன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்நாட்டை அவமானப்படுத்திவிட்டார் முதல்வர் விஜய். காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் விஜய். விவசாயிகளின் துரோகி விஜய்" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் விமர்சித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், இப்போது வரவேண்டாம் எனக் கூறியது சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மவுனம் காத்து வருகிறார்.

DMK s Paranthamen Calls CM Vijay a Betrayer of Farmers Over Cauvery Issue

இந்நிலையில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது மிகப்பெரிய பின்னடைவு. இது எதைக் காட்டுகிறது என்றால் கர்நாடகாவிற்கு அட்வாண்டேஜ். நாம் அரசியல் ரீதியாக ஒன்றாக நின்று வலிமையாக ஃபைட் பண்ணாதான் ஒரு பொலிட்டிக்கல் பிரஷர் கொடுக்க முடியும். நான் இப்போதும் சொல்கிறேன், திராவிட முன்னேற்றக் கழகம் தெளிவாக இருக்கிறது. அரசியல் ரீதியில இதற்குத் தீர்வு காண முடியாது, ஒன்றிய அரசு இதுக்குத் தீர்வு காண முடியாது. One and only way, உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மேகதாது அணையைக் கட்டக்கூடாது என்பதற்குத் தீர்ப்பாயத்தை அமைப்பதுதான் ஒரே வழி.

இந்த வழியை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத வரையில், தமிழ்நாட்டிற்குப் பின்னடைவுதான். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தியிருக்கிறார் விஜய். ஒரு முதலமைச்சர் இன்னொரு மாநிலத்திற்கு வருவதை 'வேண்டாம்' எனச் சொல்லக்கூடிய அவமானத்தை, முதல் முதலாக தமிழ்நாட்டின் மீது இந்த அவமானத்தைக் கொண்டுவந்து சேர்த்த பெருமை, பழி விஜய்யையே சாரும்.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி, தமிழ்நாட்டின் முதலமைச்சர். இது விஜய் என்ற தனிமனிதன் அல்ல! கோடிக்கணக்கான தமிழ் மக்களுடைய மானம், மரியாதை! நீ வராதேன்னு சொல்லக்கூடிய அளவுக்கு இருக்குன்னா... நிச்சயம் போனா, உத்தரவாதம் இல்லைங்கிற ஒரு செய்தி. ஆனாலும்கூட நீங்க போறதா ஒரு தகவல் போயிருக்கு. ஆனா நீங்க வர வேண்டாம் என அங்க இருக்குற முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார். இதுவே அவமானம் இல்லையா?

தமிழ்நாட்டிற்கு இதைவிட பெரிய அவமானத்தை எதுவுமே தேடிக் கொடுக்க முடியாது. தமிழ்நாட்டை அவமானப்படுத்திவிட்டார் முதல்வர் விஜய். காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் விஜய். இன்னும் சொல்லப்போனால், விவசாயிகளின் துரோகி விஜய்" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+