திமுக செம.. என்னா ஒரு வேகம்.. 2 கோடி கையெழுத்து.. டெல்லியில் குவிந்த கட்டுக்கள்.. அயர்ச்சியில் பாஜக!
திமுகவின் கையெழுத்து இயக்கம்.. பாஜகவை திரும்பி பார்க்க வைத்துள்ளது
சென்னை: திமுக தரப்பு படு கமுக்கமாக இருப்பதாக பாஜக கருதுகிறதாம். உள்ளே என்ன நடக்கிறது என்பது குறித்த ஆய்வுகளை அது முடுக்கி விட்டுள்ளதாம்.
அரசியல் களத்தில் மு.க.ஸ்டாலின் தற்போது பெருத்த நிதானமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். வழக்கமாக வரும் அதிரடிகளை காண முடியவில்லை.
மாறாக அமைதியாக நிதானமாக எல்லாவற்றையும் எதிர் கொண்டிருக்கிறார். அதேசமயம் செய்ய வேண்டிய வேலைகளை கரெக்டாக செய்து கொண்டிருக்கிறாராம்.

குடியரசு தலைவர்
குறிப்பாக சிஏஏ எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை நடத்தி வெற்றிகரமாக 2 கோடி கையெழுத்துக்களையும் பெற்ற திமுக அதை அதிரடியாக குடியரசுத் தலைவரிடமும் ஒப்படைத்துள்ளது. இது பாஜகவை யோசிக்க வைத்துள்ளதாம். திமுகவில் என்னதான் நடக்கிறது.. எப்படி இவ்வளவு கையெழுத்தை அவர்களால் பெற முடிந்தது.. எப்படி அவர்கள் செயல்படுகிறார்கள் என்பது பாஜகவினரை குழப்பி வருகிறதாம்.

பாஜக
மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக ஏதாவது அதிரடி காட்டலாம் என்ற சந்தேகமும் பாஜக தரப்புக்கு உள்ளதாம். எனவே திமுகவுக்குள் என்ன நடக்கிறது என்று வேவு பார்க்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாம். திமுகவைப் பொறுத்தவரை தற்போது சில முக்கியமான கட்டமைப்பு வேலைகளில் தீவிரமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை திமுக சத்தமில்லாமல் முடுக்கி விட்டுள்ளது. எங்கெல்லாம் குறைகள் இருக்கிறதோ அதையெல்லாம் சரி செய்யும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன.

கூட்டணி
மறுபக்கம் மக்கள் தொடர்பான பிரச்சினைகளிலும் பக்காவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக. அதில் முக்கியமானதாக கருதப்படுவது சிஏஏ எதிர்ப்பு கையெழுத்து இயக்கம். இந்த இயக்கம் குறித்து அறிவிப்பு செய்த திமுக, இதை முழு வீச்சில் மக்களிடம் கொண்டு சென்றது. மாநிலம் முழுவதும் திமுகவினரும் கூட்டணிக் கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு 2 கோடி கையெழுத்துக்களைப் பெற்று அசரடித்து விட்டனர்.

டெல்லி வட்டாரம்
அத்தோடு நில்லாமல் குடியரசுத் தலைவரிடமும் இந்த கையெழுத்துக்கள் அடங்கிய கட்டுக்களையும் திமுக கூட்டணி தலைவர்கள் ஒப்படைத்துள்ளனர். இந்த வேகம்தான் பாஜகவை யோசிக்க வைத்துள்ளது. எப்படி இவர்களால் குறுகிய நேரத்துக்குள் 2 கோடி கையெழுத்துக்களைப் பெற முடிந்தது என்று டெல்லி வட்டாரம் அதிர்ந்து நிற்கிறதாம். தேசிய அளவில் மற்ற கட்சிகளையும் கூட இது ஆச்சரியப்படுத்தியுள்ளது என்கிறார்கள். திமுக படு வேகமாக இருக்கிறதே என்பதுதான் அவர்களின் ஆச்சரியம்.

மின்னல் வேகம்
தமிழகத்தில் தங்களுக்கு சாதகமான ஒரு ஆட்சிதான் உள்ளது. அப்படி இருந்தும் கூட இப்படி ஒரு செயலை திமுக மின்னல் வேகத்தில் செய்து முடித்திருப்பது பாஜகவை அதிர வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவைப் பொறுத்தவரை இதுபோன்ற இயக்கமெல்லாம் ஜஸ்ட் லைக் தட் விஷயம் என்று டெல்லி வட்டாரத்திற்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற நூற்றுக்கணக்கான இயக்கங்களைக் கண்ட கட்சிதான் திமுக என்பதும் டெல்லி வட்டாரத்திற்குத் தெரியாதது இல்லை.
இப்படி திமுக படுவேகமாக போய்க் கொண்டிருப்பதால் எப்படி பிரேக் போடுவது என்று தெரியாமல் மண்டை காய்ந்து கிடக்கிறதாம் டெல்லி. ஆனால் தற்போது திமுக அடுத்தடுத்த வேலைகளுக்குப் போய் விட்டது!!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications