எஸ்பிஐயில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா.. இப்படி மெசேஜ் வந்தால் உஷாரா இருங்க.. மத்திய அரசு வார்னிங்
சென்னை: கடந்த சில தினங்களாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் வாயிலாக மெசேஜ் வருவதாக சொல்லப்படுகிறது. அந்த மெசேஜில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டு, அதை கிளிக் செய்தால் ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது போன்ற மெசேஜ்கள் வந்தால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசின் பேக்ட் செக் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பேங் ஆப் இந்தியா. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி வங்கியாக தகிழ்கிறது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் எஸ்பிஐ வங்கியின் கிளைகள் உள்ளன. எஸ்பிஐ வங்கி தன்னுடைய அபரிமிதமான சேவையால், ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது..

எஸ்பிஐ வங்கி: அதேபோல, தன்னுடைய கஸ்டமர்களின் வசதிக்காக பல்வேறு ஆன்லைன் சேவைகளையும் எஸ்பிஐ தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது இணைய வழியிலான பரிவர்த்தனைகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால், பெரும்பாலானவர்கள் வங்கி பக்கமே செல்வது இல்லை. அனைத்து சேவைகளையும் ஆன்லைன் பரிவர்த்தனையிலேயே முடித்து விடுகிறார்கள்.
வாட்ஸ் அப்பில் மெசேஜ்: கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு சேவைகளை பயன்படுத்தும் போது ரிவார்ட் பாயிண்டுகளும் சில சமயம் வழங்கப்படுகின்றன. இந்த பாயிண்டுகளை பயன்படுத்தி தள்ளுபடியில் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். ஆனால், டெக்னாலஜி பெருக பெருக மோசடி பேர்வழிகளின் திருட்டு சம்பங்களும் நூதன வழியில் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த ரீவார்டு பாயிண்டுகளை பெற மக்களும் ஆர்வம் காட்டுகின்றன.
எனவே இந்த தந்திரத்தை பயன்படுத்தி அதன் மூலமாக மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பணம் சம்பாதிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அதாவது பரிசு விழுந்திருக்கிறது, பணம் கிடைத்துள்ளது போன்ற காரணங்களை சொன்னால் யாரும் லிங்கை கிளிக் செய்ய மாட்டார்கள் என்பதால் தற்போது மோசடி கும்பலினர் ரிவார்டு பாயிண்டு முறையை கையில் எடுத்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் வாயிலாக இதுபோன்ற மெசேஜ் வருவதாக சொல்லப்படுகிறது.
லிங்கை கிளிக் செய்தால்: அதாவது எஸ்பிஐ வங்கியின் பெயரில் போலியாக அனுப்பப்படும் இந்த மெசேஜில், ரீவார்ட் பாயிண்டுகள் உங்களுக்கு இருப்பதாகவும் இன்றைக்குள் கலாவாதி ஆகிவிடும். இந்த பாயிண்டுகளை பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதை கிளிக் செய்தால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணம் அபேஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது.
கவனமாக இருக்கவும்: எனவே, தான் மத்திய அரசின் பேக்ட் செக் இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து போலி மேசேஜ் அனுப்பப்படுகிறது. எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட் என்ற பெயரில் ஏபிகே ஃபைல்களை டவுன்லோடு செய்ய சொல்லி மெசெஜ் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். எஸ்பிஐ இப்படி மெசெஜ் அனுப்புவதில்லை. எனவே கவனமாக இருக்கவும்” என்று தெரிவித்துள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications