இபி பில் கட்ட போறீங்களா? ஜாக்கிரதை.. இந்த ஒரு லிங்கை கிளிக் பண்ணா போதும்.. எல்லா பணமும் காலியாகிடும்
சென்னை: தமிழ்நாட்டில் நவீனமான முறையில் இபி பில் மோசடி ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது.
மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 2-3 வகையாக பிரிந்து உள்ளது.
இபி மோசடி: இந்த நிலையில்தான் இபி பில் மோசடி ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. அதன்படி நம்முடைய போன் நம்பர்களை பல்வேறு டேட்டா பேஸில் இருந்து திருடும் கும்பல் ஒன்று இந்த வேலைகளை செய்கிறது. அவர்கள் செய்யும் மோசடி மிக சிம்பிளானது.
நம்முடைய போனுக்கு இபி பில் கட்ட சொல்லி மெசேஜ் செய்வார்கள். 1000- 1500 ரூபாய் வரை பில் இருப்பதாக மெசேஜ் அனுப்புவார்கள். நீங்கள் பில் கட்டவில்லை. இன்னும் 1 மணி நேரத்திற்குள் கட்டவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கப்படும் என்று அந்த மெசேஜில் கூறப்பட்டு இருக்கும்.
அதே மெசேஜில் வேகமாக பில் கட்ட இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்றும் கூறப்பட்டு இருக்கும். அது ஒரு பொய்யான லிங்க் ஆகும். அதில் போய் பணத்தை நாம் கொடுத்து வங்கி விவரங்களை கொடுத்தால் அந்த குறிப்பிட்ட பணம் மோசடியாளர்கள் கைக்கு சென்றுவிடும்.
சமயங்களில் அவர்கள் கொடுக்கும் விவரத்தை வைத்து மொத்த தொகையும் கூட வங்கியில் இருந்து திருடப்பட்டுவிடும். இது போன்ற மெசேஜ்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம்.. அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று மின்சாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மின்சாரத்துறையின் அதிகாரபூர்வ பக்கம் அல்லது நேரடியாக இபி போர்டில் பில் கட்டுங்கள் என்றும்
கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எப்படி கட்டுவது?: இந்த மாதமோ இல்லை வரும் மாதங்களிலோ நீங்கள் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த போகிறீர்கள் என்றால் பின்வரும் விவரங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த விரும்பினால் பின்வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.
நீங்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த விரும்பினால் பின்வரும் முறைகளை பின் பற்ற வேண்டும்.
படி 1 - தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tnebnet.org/awp/login?locale=en என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
படி 2 - உங்களுக்கு லாக் இன் இருந்தால் இந்த பக்கத்தில் லாக் இன் செய்ய முடியும்.
படி 3 - இல்லையென்றால் இதில் உள்ள quick pay என்ற வசதியை பயன்படுத்த முடியும்.
படி 4 - அதில் உங்கள் கஸ்டமர் ஐடியை கொடுக்க வேண்டும். உங்களின் 2 இலக்க மண்டல எண் மற்றும் 9 இலக்க கஸ்டமர் எண்ணை கொடுக்க வேண்டும். கஸ்டமர் எண் உங்கள் மின் அட்டையில் இருக்கும்.
உங்கள் மண்டல எண் என்பது நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை பொறுத்தது. அதை பின்வரும் பட்டியலில் தெரிந்து கொள்ள முடியும்.
01 சென்னை வடக்கு:திருவொற்றியூர், மணலி, மாதவரம், தொண்டீர்பேட்டை, ராயபுரம், திரு-வி-க-நகர், தேனாம்பேட்டை, அம்பத்தூர் மண்டலங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி.
02 விழுப்புரம்:கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம்
03 கோவை:கோவை, திருப்பூர், நீலகிரி
04 ஈரோடு:ஈரோடு, நாமக்கல், சேலம்
05 மதுரை:மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி
06 திருச்சி:அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி
07 திருநெல்வேலி:கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்
08 வேலூர்:தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி
09 சென்னை தெற்கு:அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்கள், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டம்
படி 5 - இந்த 2 இலக்க எண் அதன்பின் உங்க கஸ்டமர் எண்ணை கொடுத்து அதில் உள்ள captcha எண்ணை கொடுக்க வேண்டும்.
படி 6 - அடுத்த பக்கத்தில் உங்க பில் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
படி 7 - கடைசி பக்கத்தில் பல வங்கி பரிவர்த்தனை வழிகள் இருக்கும். இதில் நீங்க வங்கி கணக்கு வைத்துள்ள நெட் பேங்கிங்,யுபிஐ அது கார்ட் பேமெண்ட் முறைகளை கிளிக் செய்து கட்டணத்தை செலுத்த முடியும்.












Click it and Unblock the Notifications