சென்னையில் இந்த ஏரியா பக்கம் எல்லாம் போகாதீங்க! மூடப்படும் முக்கிய சாலைகள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடக்க உள்ள மாரத்தான் போட்டிகள் காரணமாக இன்று மாலை பல்வேறு சாலைகள் மூடப்பட உள்ளன.

சென்னையில் மாரத்தான் போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. மாரத்தான் போட்டிகள் மக்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. உடல் ஆரோக்கியம், நல்ல உடல் தோற்றம், மருத்துவம், விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாரத்தான் போட்டிகள் நடந்து வருகின்றன.

Do not go to this area in Chennai: Major roads to be closed, What is the reason?

முக்கியமாக தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தீவிரமாக மாரத்தான் போட்டிகளை விரும்ப கூடியவர் . அதனால் அவரும் மாரத்தான் போட்டிகளை ஊக்குவித்து வருகிறார். இந்த நிலையில்தான் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு மாரத்தான் போட்டிகள் நடக்க உள்ளன.

சாலைகள் மூடப்படும்: சென்னையில் நடக்க உள்ள மாரத்தான் போட்டிகள் காரணமாக இன்று மாலை பல்வேறு சாலைகள் மூடப்பட உள்ளன.

ஆவடி இரவு மாரத்தான் போட்டியின் 2ஆம் பாகம் வருகின்ற 02.10.2023 ஆம் தேதி அன்று மாலை 4 மணிக்கு ஆவடி வேல்டேக் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. மேற்படி இரவு மாரத்தான் போட்டி 21 கி.மீ, 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என 3 பிரிவுகளாக நடைபெற உள்ளது. இப்போட்டி வேல் டெக் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கி மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக நெமிலிச்சேரி சுங்கச்சாவடி வரை 3 பிரிவுகளின் தூரத்தை கடந்து மீண்டும் வேல்டேக் பல்கலைக்கழகத்தில் முடிவடையும். மேற்படி போட்டியின் காரணமாக கனரக வாகனங்கள் 02.10.2023 அன்று மாலை 1600 மணிமுதல் 2200 மணிவரை கீழ்கண்ட மாற்று பாதையில் திருப்பிவிடப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முக்கியமாக இங்கே டிராபிக் ஜாம் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மீஞ்சூரில் இருந்து 400 அடி வெளிவட்ட சாலையில் வண்டலுார் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் செங்குன்றம் ஆர்.டி.ஓ பாலம் சேவை சாலை வழியாக தடா அல்லது புழல் வழியாக ஜீ.என்.டி சாலையில் திருப்பி விடப்பட்டு புழல் தாம்பரம் உள்வட்ட சாலை வழியாக வண்டலுார் செல்லலாம்.

Do not go to this area in Chennai: Major roads to be closed, What is the reason?

திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் காந்தி நகர் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு 400 அடி வெளிவட்ட சாலை வழியாக மீஞ்சூர் அல்லது ஜி.என்.டி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு புழல் - தாம்பரம் உள்வட்ட சாலை வழியாக வண்டலுார் செல்லலாம்.

தடாவில் இருந்து 400 அடி வெளிவட்ட சாலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஜி.என்.டி சாலையில் புழல் நோக்கி திருப்பி விடப்பட்டு திருப்பி விடப்பட்டு புழல் - தாம்பரம் உள்வட்ட சாலை வழியாக வண்டலுார் செல்லலாம்.

திருநின்றவூரில் இருந்து 400 அடி வெளிவட்ட சாலை நேக்கி வரும் கனரக வாகனங்கள் பட்டாபிராம் தண்டுறை பாலம் மற்றும் திருமணம் வழியாக 400 அடி வெளிவட்ட சாலை வழியாக வண்டலூர் செல்லலாம்.
ஓசிஎப் சாலையில் இருந்து வேல் டெக் நோக்கி வரும் வாகனங்கள் ஜெகஜீவன்ராம் சிலை அருகே திருப்பி விடப்பட்டு சிடிஎச் சாலை -புழல் - தாம்பரம் உள்வட்ட சாலை வழியாக வண்டலுார் அல்லது புழல் செல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+