நாளை முதல்.. வருமான வரி ரிட்டர்ன்ஸ்.. இதை மட்டும் சரியா பண்ணலைன்னா.. 1 ரூபாய் கூட கைக்கு வராது!
சென்னை: நாளை முதல்.. அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் கால அவகாசம் தொடங்க உள்ளது. நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் refund தொகை கிடைக்காமல் போகலாம்.
இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ல் தொடங்கி.. ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு வருடமும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம், நேரம் கொடுக்கப்படும். இந்த வருடம் ஜூலை 31 வரை வருமான வரி செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் இதில் 7.5 கோடிக்கு அதிகமானோர் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

வருமான வரி refund கிடைக்காது
பலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் ரீ பண்ட் கிடைக்காமல் போகலாம்.
1. முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும்.
2. வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
3. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விடும் வாய்ப்புகள் உள்ளன. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்யவது இல்லை இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படுவது இல்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ரி பண்ட் சென்றுவிடும்.
4.. வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.
5. ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை வருமான வரித் துறை அதிக அளவு தொகையை கொடுத்துள்ளது. கடைசியாக தாக்கல் செய்த பலருக்கு இந்த வாரம் கொடுக்கப்படும். நீங்கள் வேகமாக செய்தால் வேகமாக பணம் கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications