எக்காரணத்தை கொண்டும் பொதுவெளியில் செல்போனை கீழே வைக்கவே வேண்டாம்.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: எக்காரணத்தை கொண்டும் பொதுவெளியில் செல்போனை கீழே வைக்கவே வேண்டாம், அப்படி வைத்துவிட்டு அஜாக்கிரதையாக இருந்தால் உங்கள் கண் முன்னே செல்போன் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. இந்த வீடியோவை பாருங்கள்.. உங்களுக்கே புரியும்.

செல்போனை கண்ட இடத்தில் வைப்பது பலருக்கும் ஒரு வழக்கமான ஒன்றாக உள்ளது. அப்படி செல்போனை தெரியாமல் வைத்துவிட்டு தேடுவதையே இன்றைக்கு அன்றாட நிகழ்வாக சிலர் வைத்துள்ளார்கள். சிலர் வெளியில் எங்காவது சென்றால், அந்த இடத்தில் செல்போனையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். திடீரென யாராவது அழைத்தால், அல்லது யாருடனாவது பேச வேண்டிய நிலை வந்தால், பக்கத்தில் செல்போனை வைத்துவிட்டு பேசுவார்கள். அப்படி உங்கள் அருகில் செல்போனை வைக்கும் இடம் பொதுவெளியாக இருக்கக்கூடாது.

cell phone hotel

குறிப்பாக ரயில் நிலையங்களில் பேருந்துநிலைங்களில் வைத்தால் மக்கள் கூட்டத்தில் உங்கள் செல்போனை யாராவது திருடி செல்லும் வாய்ப்பு உள்ளது. ஒரு நொடி அசந்தால் கூட செல்போனை எளிதாக தூக்கிவிடுவதுடன், அதனை பாஜாரில் போய் பாதி விலைக்கு விற்றுவிடுவார்கள். உங்கள் செல்போனில் சாப்ட்வேரை அழித்துவிட்டு, புதிய சாப்ட்வேர் போட்டு பழைய செல்போனாக அவர்கள் வேறு யாருக்காவது விற்றுவிடுவார்கள்,..

செல்போனை நீங்கள் தொலைத்தால், வங்கி சம்பந்தமான பாஸ்வேர்டுகள், உங்கள் இமெயில் விஷயங்கள், உங்கள் தொடர்புகள், உங்களுக்கு நெருக்கமானவர்களின் செல்போன் எண்கள் என அத்தனையும் மிஸ்ஸாகும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி புதிய சிம் வாங்கும் வரை உங்களால் வங்கி பரிவர்த்தனை செய்ய முடியாதநிலை ஏற்படும். மேலும் புதிய செல்போன் வாங்கவும், புதியசிம் வாங்கவும் கணிசமாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்..

செல்போன் என்பது உங்களை தொடர்பு கொள்ளவும், நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளவும் பயன்படும் முக்கியமான விஷயம் என்பதுடன், கூகுள்பே போன்பே போன்ற பயன்பாடுகளுடன் கூடிய பணப்பெட்டி ஆகும்.. எனவே செல்போனை தொலைத்தால் அதனால் ஏற்படும் இழப்பு பெரிய அளவில் இருக்கும்.

எனவே எக்காரணத்தை கொண்டும் பொதுவெளியில் செல்போனை கீழே வைக்கவே வேண்டாம், அப்படி வைத்துவிட்டு அஜாக்கிரதையாக இருந்தால் உங்கள் கண் முன்னே செல்போன் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. ஓட்டலில் ஒருவர் தன் டேபிளில் செல்போனை வைத்துவிட்ட சாப்பிட்டுக் கொண்டே மற்றவருடன் மும்முரமாக பேசிக்கொண்டிருக்கிறார். அவரது செல்போன் டேபிளில் இருப்பதை பார்த்த ஒரு திருடன் நைசாக வந்து பின்பக்கமாக கையைவிட்டு திருடி செல்கிறான். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+