வாக்களிக்க போகும் போது எக்காரணம் கொண்டும்.. "இதை" கையில் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்! முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு இன்று நீங்கள் வாக்களிக்க செல்கிறீர்கள் என்றால் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பொருட்கள் எதையும் எடுத்து செல்வதை தவிர்க்கவும்.

2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Do not take these things with you when you go for voting in Lok Sabha Elections 2024

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தல்: நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலோடு எல்லா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எப்படி வாக்களிக்க வேண்டும்: உங்கள் பெயர் பூத் ஸ்லிப்பில் இருந்தால் வாக்காளர் அடையாள அட்டை காட்டி வாக்களிக்க வேண்டும். பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லை என்றாலும் அந்த பூத்தில் உங்கள் வாக்கு இருக்கிறதா என்று சோதனை செய்துவிட்டு வாக்காளர் அடையாள அட்டை மூலம் வாக்களிக்கலாம்.

இல்லையென்றால் பின்வரும் ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

ஆதார் அட்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
பான் கார்டு பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
MGNREGA அட்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
RIC ALL (RESIDENT IDENTITY CARD) PASS பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
வங்கி பாஸ்புக் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
ஓய்வூதிய அட்டை (PENSION CARD)
அஞ்சலக பாஸ்புக் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
ESI அட்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
மக்கள் பிரதிநிதிகள் அடையாள அட்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
பாஸ்போர்ட் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

எடுத்து செல்ல கூடாத பொருட்கள்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு இன்று நீங்கள் வாக்களிக்க செல்கிறீர்கள் என்றால் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பொருட்கள் எதையும் எடுத்து செல்வதை தவிர்க்கவும்.

அதன்படி மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல கூடாது.

ஸ்மார்ட் போன், சாதா போன் எடுத்து செல்ல கூடாது.

கேமரா எடுத்து செல்ல கூடாது.

கணினி எடுத்து செல்ல கூடாது.

டேப் லேட் எடுத்து செல்ல கூடாது.

ஸ்மார்ட் வாட்ச் அனுமதி இல்லை.

மேற்கண்ட மின்னணு சாதனங்கள் எதையும் வாக்களிக்கும் மையத்திற்கு எடுத்து செல்ல கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+