Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனது படம், பெயர், பட்டத்தை பயன்படுத்தக் கூடாது! கோர்ட்டுக்கு போன ’உலக நாயகன்’ கமல்ஹாசன்! என்ன ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களால் உலகநாயகன் என அழைக்கப்படும் என நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தயாரித்துள்ளார். அதில், தற்போதும் எதிர்காலத்திலும் தனது பெயர், குரல், படம், உலகநாயகன் பட்டம் ஆகியவற்றை வணிக ரீதியாக பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், சிந்தனைமிக்க படைப்புகளாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

இப்படி பல தசாப்தங்களாக தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவரும் கமல்ஹாசன், தனது கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய பெயர், புகழ் மற்றும் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில் தற்போது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Kamal Haasan Ulaganayagan cinema

கமல்ஹாசன் வழக்கு

அதன்படி, தனது அனுமதி இல்லாமல் தனது புகைப்படம், பெயர், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தை யாரும் வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்," திரையுலகில் தன்னைச் சுற்றி உருவான பிரபலத்தையும், அதனால் கிடைத்த அடையாளத்தையும் சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், இது தனக்கு மட்டுமல்ல, தனது நற்பெயருக்கும், ரசிகர்களிடம் உருவாக்கிய நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த 'நீயே விடை' என்ற நிறுவனம், அவரது அனுமதி இன்றி அவரது புகைப்படம் மற்றும் திரைப்பட வசனங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை விற்பனை செய்து வருகிறது.

உலகநாயகன் பட்டம்

இதுபோன்ற வணிக நடவடிக்கைகள், தன்னை ஒரு தயாரிப்பாக மாற்றும் முயற்சியாக இருப்பதாகவும், அதனை அனுமதிக்க முடியாது. தனது உருவம் அல்லது குரலை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வது, சட்டப்படி அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் அடையாளம் தெரியாத யாரேனும் தனது பெயர், புகைப்படம், குரல் அல்லது 'உலகநாயகன்' என்ற பட்டத்தை வணிக நோக்கில் தவறாக பயன்படுத்தினாலும், அவர்களுக்கும் இந்தத் தடை பொருந்த வேண்டும். இதற்காக பொதுவான ஒரு தடையுத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

அடையாள உரிமை

திரையுலகில் பிரபலங்களின் அடையாளங்கள் இன்று ஒரு வணிகப் பொருளாக மாறிவிட்ட சூழலில், இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்கள், ஆன்லைன் விற்பனை தளங்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது வழக்கமாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே கமல்ஹாசன் இந்த சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்

கமல்ஹாசன் சட்ட நடவடிக்கை

இந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதன் முடிவு, எதிர்காலத்தில் பிற நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையக்கூடும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள். ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் இதேபோன்று தங்கள் பெயர் மற்றும் அடையாளத்தை பாதுகாக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவுகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+