ஒன்னு இல்லை.. ரெண்டு? திமுகவில் 2 பேர் துணை முதல்வர்? உதயநிதி ஒருத்தர்.. இன்னொருத்தர் அவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு துணையாக 2 பேருக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் என்ற தகவல் ஒன்று பரவ தொடங்கி உள்ளது. கட்சிக்குள் சீனியர்களை திருப்திப்படுத்த இப்படி ஒரு திட்டத்தை ஸ்டாலின் கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவ தொடங்கி உள்ளன.

தமிழ்நாட்டில் விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்.

Udayanidhi Stalin DMK M K Stalin

அமைச்சரவை மாற்றம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் 22-ந்தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக தகவல் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.

பயண திட்டத்தில் மாற்றம்: அந்த பயணத்திட்டம் சற்று மாற்றப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வருகின்றன. அதாவது, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு அதன்பிறகு வெளிநாடு செல்லலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

துணை முதல்வர் பதவி: இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் நாளை புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்

உதயநிதியை துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின், இதை வதந்தி என்று மறுத்தாலும்.. அமைச்சரவை மாற்றத்தில் கண்டிப்பாக அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றே கூறுகின்றனர்.

இரண்டு பேர்: அமைச்சரவை மாற்றம் + உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி உட்பட அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஸ்டாலின் வெளிநாடு செல்வதை முன்னிட்டு ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கப்படலாம் என்கிறார்கள். அதே சமயம் உதயநிதி மட்டுமின்றி ஆளும் திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு துணையாக உதயநிதியோடு சேர்த்து மொத்தம் 2 பேருக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் என்ற தகவல் ஒன்று பரவ தொடங்கி உள்ளது.

அமைச்சர் துரைமுருகன் போன்ற சீனியர் ஒருவருக்கும் கூடுதலாக துணை முதல்வர் பதவி தரப்படலாம், கட்சியில் இதன் மூலம் சீனியர்களை குஷிப்படுத்தலாம், பொது விமர்சனங்களையும் தவிர்க்கலாம், என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.

துணை முதல்வர் பதவி என்பது கூட்டாக முடிவெடுக்க வேண்டிய விவகாரம் எனவும் கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள் என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க அமைச்சர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், துரைமுருகன் இவ்வாறு கூறியுள்ளார். துரைமுருகன் தனக்கு இருக்கும் ஆசையை இவ்வாறு தெரிவித்தாரா, அல்லது முதல்வர் ஏற்கனவே அவரோடு இதுபற்றி பேசியிருந்தாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் துரைமுருகன் வாயில் இருந்தே இப்படி ஒரு வார்த்தை வந்துவிட்டதால், அவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+