செல்போனை ரயிலில் சார்ஜ் போடுவீங்களா.. இந்த வீடியோவை பாருங்க.. மறந்தும் இந்த தப்பை பண்ண மாட்டீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் மொபைல் சார்ஜ் போடும் போது எப்பவும் அதில் ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். சார்ஜ் போட்டு மொபைலை பேக்கில் வைத்து ஜிப் போட வேண்டும். இல்லை என்றால் யாராவது திருடி செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த செய்தியில் உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

ரயிலில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். ரயிலில் பயணிப்போர் கவனமாக இல்லாவிட்டால் தங்கள் உடமைகளை இழக்க வேண்டிய நிலை வரும். ரயிலில் நன்றாக தூங்கி கொண்டிருக்கும் போது, அருகில் உள்ள அல்லது வேறு யாரோ ஒருவர் உடமைகளை எடுத்துக் கொண்டு திடீரென இறங்கி சென்றுவிடுவார்கள். பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் ஏசி பெட்டிகளில் நடப்பது இல்லை.. அதே நேரம் ஸ்லீப்பர் பெட்டி மற்றும் அன்ரிசர்வ்டு பெட்டி ஆகியவற்றில் அவ்வப்போது நடப்பது உண்டு. பெரும்பாலும் அன்ரிசவ்டு பெட்டிகளில் தான் நடக்கும்.

train cell phone indian railway

அன்ரிசவ்டு பெட்டிகள் மற்றும் 2ம் வகுப்பு பெட்டி உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளில் செல்வோர் கவனமாக இல்லாவிட்டால் கண்டிப்பாக செல்போன, நகை அல்லது பொருட்களை பறிகொடுக்க வேண்டிய நிலை வரலாம். குறிப்பாக செல்போன்களை இழப்பது அடிக்கடி நடக்கும். சென்னையில் வித்தியாசமான திருட்டு அடிக்கடி நடக்கும்.

ரயில் படிக்கெட்டில் வைத்து செல்போன் பயன்படுத்துவோரை குறிவைத்து நடக்கும். ரயில் படிக்கெட்டில் உட்கார்ந்து செல்போன் பார்ப்பவர்களிடம் சில சிறுவர்கள், குச்சியை வைத்து தட்டிவிட்டு பறித்து செல்வார்கள். இது அவ்வப்போது நடக்கும்.

அதேநேரம் அன்ரிசர்வ்டு மற்றும் முன்பதிவு ரயில் பெட்டிகளில் செல்போன் சார்ஜ் போடும் போது, அதன் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மொபைலை பேக்கில் வைத்து ஜிப் போட வேண்டும். இல்லை என்றால் யாராவது திருடி செல்ல வாய்ப்பு உள்ளது.
அப்படித்தான் ஒருவர் சார்ஜ் போட்டிருந்த போது ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து சரியாக வந்த ஒரு இளைஞன் செல்போனை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடிப்போய்விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+