Coconut Water குடிக்கிறீங்களா சார்? தமிழிசையிடம் ‛நோ’ சொன்ன அமித்ஷா.. வேற என்ன கேட்டார் தெரியுமா?
சென்னை: குமரி அனந்தன் மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு இன்று அமித்ஷா நேரில் சென்றார். குமரி அனந்தன் உருவப்படத்துக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை தமிழிசை சவுந்தரராஜன், அமித்ஷாவிற்கு அறிமுகம் செய்தார். அப்போது Coconut Water குடிக்கிறீங்களா சார்? என்று அமித்ஷாவிடம், தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார். அதற்கு கையை அசைத்து ‛நோ' சொன்ன அமித்ஷா சிரித்தபடி இந்தியில் இன்னொரு பானத்தை கேட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். இன்று அவர் முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் மாஜி தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்கு சென்றதுமே குமரி அனந்தனின் உருவப்படத்துக்கு அமித்ஷா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அமித்ஷா உடன் மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் சென்றனர்.
அதன்பிறகு அவர்கள் அனைவரும் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தனர். அமித்ஷா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தனித்தனி இருக்கையில் அமர்ந்து இருந்தனர். ஒரு சோபாவில் அண்ணாமலை, எல் முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். இன்னொரு சோபாவில் தமிழிசை சவுந்தரராஜனின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் தனது தந்தை குமரி அனந்தனின் பெருமைகள் பற்றியும், அவர் சிறைவாசம் அனுபவித்தது பற்றியும் எடுத்து கூறினார். மேலும் தனது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அவர் அமித்ஷாவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த வேளையில் தமிழிசை சவுந்தரராஜன், அமித்ஷாவிடம் தயக்கமாக, ‛‛Coconut Water குடிக்கிறீங்களா, சார்?'' என்று கேட்டார். அதற்கு வேண்டாம் என்பது போல் கையால் சைகை செய்த அமித்ஷா, சிரித்தபடி ‛‛சாதா பாணி'' என்று கேட்டார். குடிக்க இளநீர் வேண்டாம். சாதாரண தண்ணீர் போதும் என்று அவர் இந்தியில் கூறினார். அமித்ஷாவிற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
***












Click it and Unblock the Notifications