இந்த படத்துல தோனி தெரியுறாரானு பாருங்களேன்.. ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருக்கும்!
சென்னை: இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருப்பது தெரிகிறதா?
மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்லூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்!
இது போன்ற படங்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. அந்த வகையில் ஒரு ஆமை ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் மேல் ஒரு குட்டி ஆமை உட்கார்ந்திருக்கிறது. இதில் ஆமையின் கை, கால்கள், இல்லாவிட்டால் ஏதாவது விலங்குகளை கண்டுபிடிக்க சொல்வார்கள் என பார்த்தால் தோனியை கண்டுபிடிக்கச் சொல்கிறார்கள்.
இந்த படம் வெளியானதுமே லட்சக்கணக்கானோர் அதை பார்த்துள்ளனர். நிறைய பேர் லைக் கொடுத்துள்ளனர். அவர்கள் எல்லாம் யாருக்கிட்ட காது குத்துறீங்க, இங்க எங்கே தோனி முகம் இருக்கிறது. என்ன ஏமாற்றுகிறீர்களா என கேட்டனர். ஆனால் இதுதான் கண் கட்டி வித்தையாச்சே!
நிஜமாகவே தோனி இருந்தாலும் இருப்பார் என பலர் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் தோல்வியை ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில்தான் அந்த படத்தை அரை கண்களால் பார்த்தால் நீண்ட முடியுடன் கூடிய தோனி தெரியுறாருங்க, நீங்களும் பாருங்களேன்! எத்தனை டெக்னிக்கான விஷயம் பாருங்கள்.












Click it and Unblock the Notifications