5 ஏக்கர் நிலம் இருக்கா? 50% மானியம் + பம்ப் செட் ரெடி.. தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. பெஸ்ட் ஆப்ஷன்
சென்னை: விவசாயிகள் புதிதாக மின் மோட்டார் வாங்க வேண்டுமானால், அதற்கு தமிழக அரசு செய்து தரும் உதவிகள் என்னென்ன தெரியுமா? இதற்கென உள்ள சிறப்பு மானியம் குறித்த விவரங்களை சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழக விவசாயிகளின் நலனுக்காக, மாநில அரசு எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, பல்வேறு வகையான உத்திகளை புகுத்தி, நலத்திட்டங்களையும் அறிவித்து, அதனை முறையாக செயல்படுத்தியும் வருகிறது. பல்வேறு உழவர் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து வருவது, விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது...

இ-வாடகை செயலி, சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், உழவர் சந்தை திட்டத்தை வலுப்படுத்தும் திட்டம், சிறு, குறு விவசாயிகளை இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல், விளைபொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற ஏராளமான நலத்திட்டங்களை வேளாண்மை - உழவர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.
குறைந்த மானியம்: இதில் விவசாயிகளால் பெரிதும் ஈர்க்கப்படுவது, பம்பு செட்டுகள் குறித்த அறிவிப்புகளாகும்.. காரணம், குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகிவிடுவதுடன், பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகமாகிறது.. இதனால், மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது.
எனவேதான், இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான பாசன நீர் இரைத்தல் போன்றவையே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது..
பம்ப் செட்டுகள்: பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு தமிழக அரசும் அவ்வப்போது கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
அதன்படி, பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விவசாயிகள் நலன்: வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் விபரம் தெரிவித்து புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கும்போது, அதன் மொத்த தொகையில் 50% அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகையே பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், தங்களது திறன்குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
மானியம்: இந்த திட்டத்தில் 5,000 சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக, தமிழக அரசு கடந்த வருடமே ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்காக 1000 எண்கள் பம்பு செட்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள், தங்களுக்கு விருப்பமான 4 ஸ்டார் தரத்திற்கு குறையாமல் உள்ள மின்மோட்டாரை தேர்வு செய்து கொள்ளலாம். அதிலும், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின் மோட்டார்கள் தேர்வு செய்யலாம். இதுவரை நுண்ணீர்ப் பாசன அமைப்பினை நிறுவிடாத விவசாயிகள், இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பினால், விவசாயிகள் நேரடியாக https://mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பாசன வசதிக்கான உதவிகளை பெறலாம்.
உழவன் செயலி மூலமாகவோ, அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்தும் பெறலாம்.. அல்லது சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் - வேளாண்மை பொறியியல் துறை அவர்களையும் அணுகலாம்.
சாதி சான்றிதழ்: இதற்கு ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், 50% மானியத்தில் சூப்பரான மின்சார பம்புசெட்டை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications