பேங்க் அக்கவுண்ட் இருக்கா? சென்னை வங்கியில் மொத்த பணத்தை காணோமாம்.. ஒரே நாளில் எப்படி மாயம்? அலர்ட்
சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் நடந்த 3 சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு தந்து வருகிறது. என்ன நடந்தது?
நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு உபயோகமாகிறதோ, அதே அளவுக்கு மோசடிகளுக்கும் உருவாக்கிவிடுகிறது.. அதனால்தான் பொதுமக்களுக்கு, நம்முடைய காவல்துறை எந்நேரமும் விழிப்புணர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கியபடியே உள்ளது.

அதேபோல, பிரபல வங்கிகளின் பெயர்களை சொல்லியும், மோசடி வேலைகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.
வங்கி விவரங்கள்: அதுமட்டுமல்ல, யாரிடமும் வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும் மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்றும் வங்கிகள் வார்னிங் தந்து வருகின்றன. மற்றொருபக்கம் பக்கம் சைபர் கிரைம் போலீசாரும், பொதுமக்களை அலர்ட் செய்து வருகிறார்கள்..
எந்த வங்கியிலிருந்தும், ஒருபோதும் ஓடிபி-யை யாருமே கேட்க மாட்டார்கள். அதனால், யாராவது உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. அவர்களது இணைப்பையும் துண்டித்துவிடுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.. இவ்வளவு அறிவுறுத்தியும்கூட, சென்னையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மர்ம கும்பல்: சென்னை கொளத்தூரை சேர்ந்த கிரி பிரசாத் என்பவருக்கு, மர்ம கும்பல் ஒன்று போன் செய்துள்ளது.. தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, உலர் பழங்கள் பிசினஸ் செய்தால், லாபம் அதிகமாக கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை சொல்லி உள்ளனர்.
இறுதியில், கிரி பிரசாத் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை வாரி சுருட்டியுள்ளது அந்த கும்பல்.. இதேபோல, ராஜமங்கலம் பகுதியில் ஆகாஷ் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.58 ஆயிரமும், அமைந்தகரை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் பணமும் சுருட்டியிருக்கிறது.
ஒரே நாள் அதிர்ச்சி: ஒரே நாளில் இந்த 3 அபேஸ் சம்பவங்கள் நடந்துள்ளன.. பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக போலீசில் புகார் தந்தார்கள்.. இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் வடமாநிலங்களிலிருந்து நெட்வொர்க் அமைத்து அரங்கேற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 3 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக, ஆன்லைன் மோசடிக்கும்பல் பணத்தை எடுத்திருப்பது சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications