ஆதார் கார்டில் அப்டேட் செய்ய கட்டணங்கள் உயர்வு.. பிறப்பு சான்றிதழ் வாங்கியவர்கள் அறிய வேண்டியவை
சென்னை: ஆதார் அட்டை அப்டேட் செய்வதற்கான சேவை கட்டணத்தை கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) உயர்த்தி உள்ளது.இதன்படி இதுவரை ஆதார் பயனர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய 100 கட்டணம் செலுத்தி வந்த பயளாளிகள் இனி 125 செலுத்த வேண்டும். அதேபோல பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்ய முன்பு 50 செலுத்தினால் போதும்.. ஆனால் இனி 75 ரூபாய் செலுத்த வேண்டும்.. அதேநேரம் கட்டணம் இல்லாமலும் சில விஷயங்களை ஆதாரில் அப்டேட் செய்ய முடியும். அது பற்றி பார்ப்போம்.
இன்றைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கிய பின்னர், குழந்தையை பள்ளியில் சேர்க்க, ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க, கல்வி உதவி தொகை பெற, சாதி சான்றிதழ் வாங்க, கல்லூரியில் சேர ஆதார் அவசியம் ஆகிறது. கல்லூரியில் சேர்ந்து முடித்த பின்னர் வேலைக்கு செல்லவும், வேலையில் சேர்ந்த உடன் வங்கி கணக்கு ஓபன் பண்ணவும் ஆதார் அவசியம் ஆகும். செல்போனிற்கு சிம் கார்டு வாங்கவும் ஆதார் அவசியமாக உள்ளது. வங்கி கணக்கு திறக்க பான் கார்டு வேண்டும் என்ற விதியும் தற்போது உள்ளது. ஆனால் பான் கார்டு வாங்கவும் ஆதார் அவசியமாக உள்ளது.

ஆதார் அவசியம்
அதேபோல் தபால் நிலையத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டம்,செல்வ மகன் சேமிப்பு திட்டம், அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் கூட ஆதார் அவசியமாகிறது. மேலும் பாஸ்போர்ட் எடுக்கவும், டிரைவிங் லைசென்ஸ் வாங்கவும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கவும் ஆதார் தேவைப்படுகிறது. வீடு, நிலம் பத்திரப்பதிவு செய்யவும், வாக்காளர் அட்டை வாங்கவும் ஆதார் அவசியம் ஆகிறது. அதேபோல் புதிதாக திருமணம் செய்வோர் திருமண சான்றிதழ் வாங்கவும், கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சேரவும் ஆதார் கார்டு அவசியமாகிறது. ஏன் கல்லறைக்கு போகும் போது கூட மனிதனுக்கு ஆதார் தேவைப்படுகிறது.
ஆதார் வாங்க என்ன வேண்டும்
இறப்பு சான்றிதழ் வாங்கவும் ஆதார் அவசியம் ஆகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட ஆதார் வாங்க பிறப்பு சான்றிதழ் அவசியம் ஆகும். பிறப்பு சான்றிதழ் இல்லாவிட்டால், இன்றைய சூழலில் ஆதார் வாங்கவே முடியாது. அந்த அளவிற்கு அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துவிட்டது.
திருத்த முடியாது
அதேபோல் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு முதலில் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டும்.. இனிமேல் முடியாது என்றால், அவர்கள் 10ம் வகுப்பு முடிக்கும் வரை காத்திருந்து, அந்த மதிப்பெண் சான்றிதழை வைத்து மட்டுமே பெயரை திருத்தம் செய்ய முடியும். அதேநேரம் பெயரை தவிர, மற்ற விவரங்களை திருத்த முடியும். அதேபோல் திருத்த முடியாத ஒன்று பிறந்த தேதி. பிறப்பு சான்றிதழில் உள்ளபடி தான் பிறந்த தேதி ஆதாரில் தருவார்கள். அதனை மாற்றவே முடியாது.ஒருவேளை பிறப்பு சான்றிதழில் சரியாக இருந்தும், ஆதாரில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம்.
பிறப்பு சான்றிதழ் பிரச்சனை
அதேபோல் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் பெயரில் இனிஷியல் இல்லை, குழந்தை பெயரில் இனிஷியல் இல்லை என்றால், ஆதாரிலும் இனிஷியல் சேர்க்க மாட்டார்கள். முன்பு சொன்னது போல் இனிஷியலுடன் 10ம் வகுப்பு சான்றிதழை வாங்கி அதனை வைத்து தான் மாற்ற முடியும். உடனே மாற்ற வேண்டும் என்றால், பிறப்பு சான்றிதழில் இனிஷயல் சேர்த்து வாங்கி வந்து, மாற்றிக் கொள்ளலாம். இதுதான் நடைமுறையாகும்.
15 வருடங்களுக்கு ஒருமுறை
தற்போதைய நிலையில் ஆதார் பயோமெட்ரிக்கும் மிக அவசியமாக உள்ளது. அதனை ஒவ்வொரு 15 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ள, பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் சேவை மையங்களில் கட்டணம் செலுத்த வேண்டும். பயனருக்கு வழங்கப்படும் சேவைக்கு ஏற்ப சேவை மையங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கட்டணம் எவ்வளவு
இந்நிலையில், ஆதார் சேவை மையத்தின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை யூஐடிஏஐ உயர்த்தி உள்ளது. தற்போது வரை ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய விரும்பும் பொதுமக்கள் 100ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று இருந்தது. ஆனால் கடந்த அக்டோபர் 1 முதல் 125 ரூபாய் செலுத்தினால் தான் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய முடியும் என்று மாறி உள்ளது.
பெயர் , பிறந்த தேதி முகவரி மாற்ற கட்டணம்
அதேபோல பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதாரில் அப்டேட் செய்ய முன்பு 50 கட்டணம் போதும். ஆனால் ரூ.75 செலுத்த வேண்டும். இந்த புதிய கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என யூஐடிஏஐ அறிவித்துள்ளது.
மை ஆதார் இணையதளம்
அதேநேரத்தில் 'மை ஆதார்' போர்ட்டல் வழியாக அடையாள மற்றும் முகவரியை வரும் ஜூன் 14, 2026 வரை கட்டணமின்றி அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2026 செப்டம்பர் 30 வரை குழந்தைகள், சிறார்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications