வேகம்.. வேகம்.. ஸ்டாலின் போட்ட உத்தரவு.. உங்க கிட்ட ரேஷன் கார்ட் இருக்கா? அப்போ முதல்ல இதை படிங்க!
சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுக்க ரேஷன் கடைகள் தற்போது நவீனமயமாகி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க ரேஷனில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிகளை மனதில் வைத்து ரேஷன் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கும் விதமாக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ரேஷன் கடைகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் பல அதிரடி திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.
பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.
ஸ்டாலின் உத்தரவு?
இந்த நிலையில்தான் தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுக்க அமல்படுத்த போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதத்தில் இருந்து எல்லா நகரத்திலும், மாநகரத்திலும் குறைந்தது ஒரு ரேஷன் கடையிலாவது இந்த திட்டம் அமலுக்கு வரும். கடைகளில் ஏற்கனவே பயோமெட்ரிக் உள்ளது.

அதாவது கை ரேகை எடுத்து பொருட்கள் கொடுக்கும் முறை உள்ளது. பயோமெட்ரிக் வேலை செய்யாத சமயங்களிலும், இனி கண் கருவிழி பதிவுகள் மூலம் பொருட்களை வாங்க முடியும். இந்த புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் கண்களை காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும்.
கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதேபோல் அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின் இன்னும் சில கிராமங்களில் இதே திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ச்சியாக வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். விரைவில் தமிழ்நாடு முழுக்க கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறாராம்.
இதன் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும். வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையை கொண்டு வர முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள். அது முற்றிலுமாக தடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications