இவர்தான் புது அமைச்சரா? 2 பேருக்கு சான்ஸ்..2 சீனியர்களின் பதவி பறிப்பு? தமிழக அமைச்சரவையில் மாற்றம்?
சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், 2 புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க போவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடக்கிறது திமுகவில்? யாருடைய பதவிக்கு கல்தா?
நேற்று முன்தினம், தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, அமைச்சரவை மாற்றம் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு பதிலளித்த முதல்வர், "அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது" என்று பதிலளித்திருந்தார். முதல்வரின் இந்த பதில், பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.

மாற்றம் - ஏற்றம்: கடந்த 2 வருடங்களாகவே, தமிழக அமைச்சரவை மாற்றப்படும் என்ற தகவல்கள் கிளம்பி வருகின்றன.. ஆனால், பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் நிலையில், நிச்சயம் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றார்கள். ஆனால், உதயநிதி விவகாரம் தள்ளி போய்க்கொண்டிருக்கிறது.
துணை முதலமைச்சர் பதவிக்கு அமைச்சர் உதயநிதி முன்னேறுவது நிச்சயம் என்றாலும், அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.. அநேகமாக வரும் அக்டோபர் 5-ந் தேதிக்கு மேல் வெளியாகலாம் என்று தலைமை செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று இன்னொரு தகவல் வெளியாகியிருக்கிறது..
33 அமைச்சர்கள்: தற்போது 33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வருகிறது... விரைவில் அமைச்சரவை மாற்றத்தின்போது, 2 புதிய இளம் அமைச்சர்களை சேர்க்க வேண்டும் என்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். அதற்காக முதலமைச்சரை உதயநிதி வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மூத்த அமைச்சர்கள் 2 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால், அவர்கள் யார் என்று தெரியவில்லை.
ஆனால், துணை முதல்வர் பதவி அறிவிப்பு தள்ளிப்போவதற்கு காரணமே உதயநிதி ஏற்படுத்தும் நிர்ப்பந்தம்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. காரணம், திமுகவில் சீனியர் அமைச்சர்களே, பதவியிலும், முக்கிய துறைகளின் அமைச்சர்களாகவும் உள்ளனர்.. ஒருவேளை தான் துணை முதல்வரானால், அவர்கள் எல்லாம் நம் சொல்படி நடப்பார்களா? அவர்களிடம் எளிதா வேலை வாங்க முடியுமா? என்ற எண்ணம் அமைச்சர் உதயநிதியிடம் இருக்கிறதாம்.
இளைஞர்கள்: அதனால், இளைஞர்கள் பலரை அமைச்சர்களாக்கினால், புதுரத்தம் பாய்ச்சப்பட்டு, கட்சி இன்னும் வேகமாக செயல்படும் என்று நம்புகிறாராம்.. பலம்பொருந்திய கட்சிகளை, திமுக தொடர்ந்து சமாளிக்க வேண்டுமானால், இளைஞர் படையை முடுக்கி விட்டு, தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் பெரிதாக நம்புகிறாராம். அதனால்தான், இந்த தாமதம் என்று சலசலக்கப்படுகிறது.
தன்னுடைய இளைஞர் அணியை சேர்ந்த 3 பேருக்கு, அமைச்சர் பதவியை, முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி கேட்டு பெற போவதாக, கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே தகவல்கள் கசிந்தன.. இப்போது மீண்டும் இதே கோரிக்கை வலுக்க தொடங்கியிருக்கிறதாம்.
2 இளைஞர்கள் அந்தவகையில், 2 இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், எந்த சீனியர் அமைச்சருக்கு பதவி பறிபோக போகிறது என்று தெரியவில்லை.
இந்நிலையில், நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தந்துள்ள பேட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது.. தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியபோது, "யார் ஏமாற போகிறார்கள் என்பது தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தின்போது தெரியும்.. முதல்வர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும்.. திமுகவில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பரபரப்பு: 2 நாட்களுக்கு முன்பு, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் எப்போது பதவி ஏற்பார் என்று மூத்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.
"அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது" என்றுகூறி துரைமுருகன் எழுந்து சென்றுவிட்டாராம்.. இந்த விவகாரத்தின் பரபரப்பு இன்னமும் அடங்காத நிலையில், தமிழிசை சொல்லியிருக்கும் கருத்துக்கள் அதற்கு மேல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. 2 இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி விரைவில் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பது, தமிழகத்தையே அதற்கு மேல் பரபரப்பாக்கிவிட்டுள்ளது.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!












Click it and Unblock the Notifications