கோடம்பாக்கம் போறீங்களா.. ஆற்காடு சாலையில் வாகனங்கள் செல்ல தடை.. 12 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெறுகிறது. சில இடங்களில் அன்டர்கிரவுண்ட் பாதைகளும் சில இடங்களில் மேம்பாலங்களில் டிராக்குகளும் அமைக்கப்படுகின்றன.

இதற்காக சாலைகளில் ஒரு பக்கமாக பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகள் நடக்கும் சாலைகளில் ஒரு பக்கமாக போக முடிந்தால் போக அனுமதி உண்டு. ஆனால் குறுகலான பாதை, மெட்ரோ பணியால் ஒரு பாதையில் செல்ல முடியாவிட்டால் அந்த பாதை வழியாக பயணிப்போருக்கு மாற்று பாதை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் சேவைக்காக 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோடம்பாக்கத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆற்காடு சாலை-யுனைடெட் இந்தியா காலனி 1 ஆவது சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் பயணிக்கலாம்.

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு சாலை சந்திப்பு முதல் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து 2-வது அவென்யூ வரை உள்ளதால் மேற்கண்ட சாலையில் ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை
விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் 12-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் ஆற்காடு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications