லெப்ட்ல இண்டிகேட்டர்.. ரைட்ல கை! ஸ்ட்ரைட்டா வண்டியை விட்ட காயத்ரி ரகுராம்! 10 ஆண்டுகால அரசியல் பயணம்
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், திமுக, விசிக, காங்கிரஸ் என பல கட்சிகளுடனும் இணக்கமாக இருக்க முயன்றார். கடைசியில் அதிமுகவில் இணைந்துள்ளார். காயத்ரி ரகுராமின் தனது அரசியல் பயணத்தில் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாமா?
பாஜகவில் காயத்ரி: 2014ஆம் ஆண்டில் இருந்து பாஜகவில் பயணம் செய்து வந்தவர் நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராம். அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்த காயத்ரி ரகுராம் 2015-ல், தமிழ்நாடு பாஜகவின் கலை பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2020ல் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட காயத்ரி ரகுராம், பாஜவின் கொள்கைகளையும், பிரதமர் மோடியின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றதை அடுத்து இனி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அடுத்த பாஜக மாநில தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற ரேஸில் காயத்ரி ரகுராம் பெயரும் அடிபட்டது. ஆனால், அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலையுடன் மோதல்: தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது அணியில் இருந்த பெப்சி சிவாவுக்கு எதிராக காயத்ரி புகார் கூறிய நிலையில், காயத்ரி பதவியில் பெப்சி சிவா நியமிக்கப்பட்டு, காயத்ரி ரகுராம் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார். காயத்ரி ரகுராம், அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அண்ணாமலை - காயத்ரி ரகுராம் இடையே உரசல் அதிகரித்தது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை விமர்சித்து வந்தனர். பதிலுக்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் அவர்களை விமர்சனம் செய்தார். அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள் தன்னை குறி வைத்து சமூக வலைதளத்தில் அட்டாக் செய்வதாக கூறினார்.

இதனால் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டார். அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார் காயத்ரி ரகுராம். அதன் பின்னர் அவர் திமுகவில் இணையப் போகிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையப் போகிறார் என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
திமுக? விசிக?: இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன். எந்தக் கட்சி அழைத்தாலும் அதில் இணைந்து மக்கள் பணியாற்றுவேன். என்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார் என்று கூறியிருந்தார். ஆனால், இரண்டு கட்சிகளுமே காயத்ரி ரகுராமுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையே தான் சக்தி யாத்திரை நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்பிறகு சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, தனக்கு ஆதரவுக்குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க உள்ளதாகவும் கூறினார் காயத்ரி ரகுராம். மேலும், திமுகவிற்கு ஆதரவான வகையில் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இயங்கி வந்தார். இதன் காரணமாக, காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

காங்கிரஸ்?: தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் 138ஆம் ஆண்டை முன்னிட்டு அக்கட்சிக்கு 1380 ரூபாய் நன்கொடை அளித்தார் காயத்ரி ரகுராம். மேலும் நன்கொடை அளித்ததற்கான ரசீதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த காய்த்ரி ரகுராம், பாஜகவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டார். எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.கவை நாங்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் இணைந்தார்: இதனால், காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. இந்தச் சூழலில் தான் இன்று (ஜன.19) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். பாஜகவில் இருந்து வெளியேறி பலர் அதிமுகவில் இணைந்த நிலையில் காயத்ரி ரகுராமும் அதிமுகவில் இணைந்துள்ளார். காயத்ரி ரகுராமின் 10 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அதிமுக அவரது இரண்டாவது கட்சி.
-
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications