Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கல்பட்டு கன்னி கோயிலின் வரம்! இளையராஜாவுக்கு மதுரை மாப்பிள்ளை! கோலாகலமான பவதாரிணியின் திருமணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணிக்காக அவருடைய அம்மா ஜீவா நிறைய இடங்களில் வரன் தேடினார் என்ற தகவலை ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இளையராஜா மகள் பவதாரிணி 1984 ஆம் ஆண்டு மை டியர் குட்டிசாத்தான் என்ற மலையாள படத்தில் பாடியிருந்தார். இதையடுத்து என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, தென்றல் சுடும், அஞ்சலி, சேதுபடி ஐபிஎஸ், ராசையா உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.

Do you know about Bhavatharini Sabari marriage?

இந்த படத்தில் அவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ஹிட்டடித்தது. இதைத் தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் பாடிய நிலையில் பாரதி படத்தில் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதை பெற்றார்.

இவர் பல்வேறு இசைக் கச்சேரிகளிலும் பாடி வந்தார். இந்த நிலையில் பவதாரிணிக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது. இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கு சிகிச்சை எடுத்த நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்தது, வயிற்று வலியும் அதிகரித்தது.

இதையடுத்து அவர் ஆயுர்வேத வைத்தியரின் ஆலோசனையின் பேரில் அங்குள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சற்று உடல்நலம் தேறி ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 25 ஆம் ஆண்டு சென்னைக்கு தனது கணவருடன் திரும்ப இருந்தார்.

இந்த நிலையில் பவதாரிணிக்கு திடீரென மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் லங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திநகரில் உள்ள இளையராஜா வீட்டில் சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணையபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தனது பாட்டி, தாய் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பவதாரிணியும் அடக்கம் செய்யப்பட்டார்.

இலங்கையில் கடைசி வரை அவருடைய கணவர் சபரி பவதாரிணியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். பவதாரிணி- சபரி தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்காக அவர்கள் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பவதாரிணியின் திருமண வாழ்க்கை குறித்து ஜெயந்தி கண்ணப்பன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: பவதாரிணிக்காக நானும் அவருடைய தாயும் பல இடங்களில் வரன் தேடினோம். ஆனால் பவதாரிணிக்கு எதுவுமே பிடிக்கவில்லை. இதையடுத்து செங்கல்பட்டு அருகே உள்ள பாலத்திற்கு கீழ் ஒரு கன்னி கோயில் இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் நல்ல வரன் அமையும் என்றார்.

இதனால் நானும் ஜீவாவும் சென்றோம். அடுத்த வாரமே அவருக்கு நல்ல வரன் அமைந்தது. மதுரையை சேர்ந்த சபரியுடன் பவதாரிணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜாதக பொருத்தம் பார்த்துதான் திருமணம் முடிவானது. திருமணத்திற்காக பவதாரிணிக்கு அவரது அம்மா புது டிசைன்களில் நகைகளை வாங்கினார்.

அவருடைய குடும்பமே பவதாரிணியின் திருமணத்தால் குதூகலமானது. இளையராஜா பட்ட சந்தோஷம் இருக்கே! இவ்வாறு ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்தார். இப்படி பார்த்து பார்த்து திருமணம் செய்த நிலையில் வாழ வேண்டிய வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார் பவதாரிணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+